உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
26 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

முச்சக்கரவண்டி மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
90 பார்வைகள்

களுத்துறை, நாகொட பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி பயணித்த முச்சக்கரவண்டி மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் அதன் சாரதி காயமடைந்துள்ளார்.

காயமடைந்தவர் களுத்துறை, ரஜவத்த பகுதியைச் சேர்ந்தவரும், திட்டமிட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடையவர் எனச் சந்தேகிக்கப்படுபவருமான ‘ரஜவத்த சஞ்சு’ என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

களுத்துறை குற்றத்தடுப்புப் பிரிவு பொலிஸார், போபுவல பகுதியில் சந்தேகத்திற்கிடமான முச்சக்கரவண்டி ஒன்றை நிறுத்துமாறு சமிக்ஞை செய்துள்ளனர்.

எனினும், பொலிஸாரின் உத்தரவைப் பொருட்படுத்தாமல் சாரதி தொடர்ந்து வேகமாகச் சென்றுள்ளார்.

இதையடுத்து, சுமார் நான்கு கிலோமீற்றர் தூரம் குறித்த முச்சக்கரவண்டியைப் பின்தொடர்ந்த பொலிஸார், நாகொட பகுதியில் வைத்து அதன் மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதில் காயமடைந்த சாரதி, மேலதிக சிகிச்சைக்காக நாகொட போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த முச்சக்கரவண்டியைச் சோதனையிட்டபோது அதிலிருந்து போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் களுத்துறை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புத்தளத்தில் அதிக மழைவீழ்ச்சி பதிவு.!

கடந்த 24 மணிநேரத்தில் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்துள்ள நிலையில், அதிகபட்சமாகப் புத்தளம் மாவட்டத்தின் கரந்திபோவல் பகுதியில் 195.7 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது என்று…

67 0 0
இலங்கை செய்திகள்

யாழில் இருந்து நெடுந்தூர பேருந்து சேவைகள் இணைந்த நேர அட்டவணையில் ஆரம்பம்.!

யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்துக்கு அருகிலுள்ள நெடுந்தூரப் பேருந்து நிலையத்திலிருந்து வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாகாணங்களுக்கான நெடுந்தூரப் பேருந்து சேவைகள் நாளை (27.10.2026) செவ்வாய்க்கிழமை முதல் இணைந்த…

74 0 0
இலங்கை செய்திகள்

உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொ**லை; முக்கிய துப்பாக்கிதாரி கைது.!

களுத்துறை, நாகொட பகுதியில் உணவக உரிமையாளர் மற்றும் அவரது மனைவி சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையதாகச் சந்தேகிக்கப்படும் முக்கிய துப்பாக்கிதாரி கடுவலை, ரனல பகுதியில் உள்ள வீடொன்றில்…

72 0 0
இலங்கை செய்திகள்

இன்று இடம்பெற்ற கோர விபத்து.!

அஹங்கம, கதலுவ பாலத்திற்கு அருகில் இன்று(26) பேருந்து ஒன்றும் டிப்பர் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐவர் காயமடைந்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். காலியிலிருந்து கொழும்பு நோக்கிப்…

64 0 0