உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

இறக்காமத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபப் ப@லி!

இலங்கை செய்திகள் 59 நிமிடங்கள் முன்
64 பார்வைகள்

அம்பாறை, இறக்காமம் 07 – நயினாகாடு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்தச் சோகச் சம்பவத்தில் நிந்தவூர், கோவில் வீதி, 19ஆம் பிரிவைச் சேர்ந்த 38 வயதுடைய மீரா தஸ்லிம் என்பவரே உயிரிழந்தவராவார்.

உணவகம் ஒன்றில் கூலித் தொழிலாளியாகப் பணியாற்றி வந்த இவர், நேற்று இரவு பணியை முடித்துக்கொண்டு மோட்டார் சைக்கிளில் வீடு திரும்பிக்கொண்டிருந்துள்ளார்.

இதன்போது, வீதியில் திடீரென எதிரே வந்த காட்டு யானையைக் கண்டு அதிர்ச்சியடைந்து, மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டுத் தப்பியோட முயன்றுள்ளார்.

அப்போது எதிர்பாராதவிதமாக நிலத்தில் இடறி விழுந்த அவரை, காட்டு யானை கொடூரமாக மிதித்ததில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் உடற்கூறாய்வு மற்றும் பிரேத பரிசோதனைகளுக்காக அம்பாறை மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித்து இறக்காமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

விலைவாசி அதிகரிப்பால் மக்களுக்கு அதிருப்தி ஏற்பட்டுள்ளது : பழனி திகாம்பரம் எம்.பி. தெரிவிப்பு

அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மக்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தி கொண்டுள்ளார்கள். அதேபோல், ஜனாதிபதி மீது நம்பிக்கை வைத்து வாக்களித்த மலையக பெருந்தோட்ட…

77 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குருதிப் பற்றாக்குறை : பழுகாமத்தில் இரத்ததான முகாம்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கில், பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இன்று…

72 0 0
இலங்கை செய்திகள்

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு – பலாலி காணி விடுவிப்புப் போராட்ட வழக்கு டிசம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி ஐவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட…

78 0 0
இலங்கை செய்திகள்

செல்வாநகர் கிராமத்தில் போ@தைப்பொருளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது கிராமத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட செல்வாநகர் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்…

67 0 0