உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு – பலாலி காணி விடுவிப்புப் போராட்ட வழக்கு டிசம்பர் 17ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
74 பார்வைகள்

பலாலியில் உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்கக் கோரி முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின்போது, பொதுப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தியதாகக் கூறி ஐவருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு எதிர்வரும் டிசம்பர் மாதம் 17ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு கடந்த ஒக்டோபர் மாதம் 22ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, பலாலி பொலிஸார் வழக்கு தொடர்பான சில வாக்குமூலங்களையும் சான்றுகளையும் மன்றில் சமர்ப்பித்திருந்தனர்.

எனினும், முழுமையான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு அறிவுறுத்தி வழக்கு அடுத்த தவணைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

முன்பதாக, பலாலி பிரதான வீதியில் அமைந்துள்ள T சந்தியில், பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகரின் ஏற்பாட்டில் கடந்த ஆகஸ்ட் மாதம் 16ஆம் திகதி இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

காலை 9.30 மணி முதல் பிற்பகல் 1.00 மணி வரை இடம்பெற்ற இப்போராட்டத்தில், உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள பொதுமக்களின் பூர்வீகக் காணிகளை விடுவிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது. இதன்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் பொதுமக்களின் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்பட்டதாகப் பலாலி பொலிஸார் குற்றஞ்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பில் பலாலி பொலிஸாரால் கடந்த ஆகஸ்ட் மாதம் 17ஆம் திகதி மல்லாகம் நீதவான் நீதிமன்றில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, MA/MC/PC/07381/26-B என்ற வழக்கு இலக்கத்தின் கீழ் ஐவருக்கும் நீதிமன்ற அழைப்பாணை விடுக்கப்பட்டது.

இந்த வழக்கில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் அனுஷியா ஜெயகாந்த், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் கணேசபிள்ளை வேந்தன், பாக்கியம், எம். குணசேகரம் மற்றும் பலாலி மீள்குடியேற்ற அமைப்பின் தலைவர் அன்டன் சுதாகர் ஆகியோர் பெயரிடப்பட்டுள்ளனர்.

மேலும், சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரும் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிடப்பட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.

பலாலி உயர் பாதுகாப்பு வலயத்திற்குள் உள்ள தமது பூர்வீகக் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி மக்கள் தொடர்ச்சியாகப் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில், குறித்த போராட்டம் தொடர்பான வழக்கு விசாரணை டிசம்பர் 17ஆம் திகதி மீண்டும் எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. 

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

இறக்காமத்தில் யானை தாக்கி இளம் குடும்பஸ்தர் பரிதாபப் ப@லி!

அம்பாறை, இறக்காமம் 07 – நயினாகாடு பகுதியில் நேற்று சனிக்கிழமை இரவு இடம்பெற்ற காட்டு யானைத் தாக்குதலில் இளம் குடும்பஸ்தர் ஒருவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.…

56 0 0
இலங்கை செய்திகள்

செல்வாநகர் கிராமத்தில் போ@தைப்பொருளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!

தமது கிராமத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட செல்வாநகர் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம்…

62 0 0
இலங்கை செய்திகள்

செல்வராசா கஜேந்திரனிடம் 3 மணிநேர விசாரணை!

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரனிடம் யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் 3 மணிநேரம் விசாரணைகள் முன்னெடுத்தனர். தியாக தீபம் திலீபனின் திருவுருவச் சிலை…

83 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறையில் குடியிருப்புப் பகுதியில் காட்டு யானை அட்டகாசம்!

அம்பாறை மாவட்டம், உகன பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நவகிரியா பகுதியில் புகுந்த காட்டு யானையொன்று அங்கிருந்த வீடொன்றை அடித்து நொறுக்கிப் பலத்த சேதப்படுத்தியுள்ளது. இன்று(25) அதிகாலை வேளையில் கிராமத்திற்குள்…

86 0 0