செல்வாநகர் கிராமத்தில் போ@தைப்பொருளைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி கிராம மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்!
தமது கிராமத்தில் அதிகரித்து காணப்படும் போதைப்பொருள் பாவனையை கட்டுப்படுத்த வலியுறுத்தி கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட செல்வாநகர் கிராம பொது அமைப்புக்களின் ஏற்பாட்டில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று முன்னெடுக்கப்பட்டது.
செல்வா நகர் முத்துமாரி அம்மன் ஆலய முன்றாக ஆரம்பித்த கவனயீர்ப்பு போராட்டம் பேரணியாக செல்வாநகர் சந்திவரை முன்னெடுக்கப்பட்டது.
கிராமத்தில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனையால் கிராமத்தின் இளைஞர்கள் தவறான வழியில் செல்வதால் கிராமத்தில் சமூக சீரழிவுகள் அதிகரித்து வருகின்ற நிலையில் உரிய திணைக்களங்கள் கட்டுப்படுத்த வலியுறுத்தி குறிதேத கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் நிறைவில் ஜனாதிபதி மற்றும் மாவட்ட அரசாங்கதிபர், கரைச்சி பிரதேச செயலாளர் ஆகியோருக்கு அனுப்பப்படவுள்ள மகஜர் வாசிக்கப்பட்டது.





