உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
25 ஞாயிறு
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் குருதிப் பற்றாக்குறை : பழுகாமத்தில் இரத்ததான முகாம்!

இலங்கை செய்திகள் 3 மணி நேரம் முன்
74 பார்வைகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நிலவும் குருதிப் பற்றாக்குறையை ஓரளவேனும் நிவர்த்தி செய்யும் நோக்கில், பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் ஒன்று இன்று நடைபெற்றது.

“ஒரு துளி குருதி – ஒரு உயிரின் நம்பிக்கை” எனும் தொனிப்பொருளில், இன்று 2026 ஒக்டோபர் 25ஆம் திகதி பழுகாமம் பிரதேச வைத்தியசாலையில் இம்முகாம் நடைபெற்றது.

கழகத்தின் தலைவர் திரு. த. குகன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கிப் பிரிவினர் கலந்துகொண்டு இரத்தத்தைச் சேகரித்தனர்.

விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்கள், சத்திரசிகிச்சைகளுக்கு உட்படும் நோயாளர்கள் உள்ளிட்ட பல்வேறு மருத்துவத் தேவைகளுக்காகக் குருதி தேவைப்படும் நோயாளர்களின் உயிர்களைக் காப்பாற்றுவதில் இரத்ததானம் முக்கிய பங்கு வகிக்கின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு, வைத்தியசாலையின் குருதித் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும், தன்னார்வ இரத்ததானம் தொடர்பான விழிப்புணர்வை மக்கள் மத்தியில் ஏற்படுத்துவதற்கும் இம்முகாம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இளைஞர்களின் சமூகப் பொறுப்புணர்வையும் மனிதநேயச் சேவையையும் வெளிப்படுத்தும் வகையில், பழுகாமம் சூட்டிங் ஸ்டார் விளையாட்டுக் கழகம் முன்னெடுத்த இம்முயற்சி பாராட்டத்தக்கதாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அநுரவின் ஆட்சியில் புதிய சட்டமூலங்கள் மூலம் பொலிஸ் இராட்சியத்தைஉருவாக்க முயற்சி : மொட்டுக் கட்சி சாடல்

“அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்குவதற்காகவே பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்துக்குப் பதிலாகப் புதிய சட்டமூலங்கள் கொண்டுவரப்பட்டு, பொலிஸ் இராஜ்யத்தை உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன” என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் அவசர பாதுகாப்பு நடவடிக்கைகள் தேவை : பொதுமக்கள் கோரிக்கை

எதிர்வரும் பருவமழை மற்றும் அனர்த்த காலங்களை முன்னிட்டு அம்பாறை மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தங்களைத் தவிர்க்கும் பொருட்டு உடனடித் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.…

68 0 0
இலங்கை செய்திகள்

ஒரு இலட்சம் ரூபாவிற்கும் அதிக பெறுமதியான சட்டவிரோத மதுபானங்கள் மீட்பு!

விசேட சோதனையின் போது 125 பியர் போத்தல்கள் மற்றும் 12 அதிவிசேட சாராய போத்தல்கள் உள்ளிட்ட பெருந்தொகையான மதுபானங்களை சட்டவிரோதமாக விற்பனைக்காக வைத்திருந்த 36 வயதுடைய சந்தேக…

72 0 0
இலங்கை செய்திகள்

போயா தினத்தில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட கோவில் தர்மகர்த்தா உட்பட இருவர் கைது!!

பொகவந்தலாவை – கெர்கஸ்வோல்ட் மத்திய பிரிவில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டு வந்தனர் எனக் கூறப்படும் இருவர் ஹட்டன் பொலிஸாரால் இன்று (25) கைது செய்யப்பட்டுள்ளனர்.  இவர்களில்…

76 0 0