உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
19 திங்கள்
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக இடமாற்றம்

இலங்கை செய்திகள் 6 மணி நேரம் முன்
41 பார்வைகள்

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை தற்காலிகமாக ஹட்டனில் தற்போது மூடப்பட்டுள்ள உதவித் தொழில் ஆணையாளர் பணிமனையின் பழைய கட்டடத்திற்கு மாற்றப்படவுள்ளதாக நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆரச்சி தெரிவித்துள்ளார்.

தற்போது இயங்கி வரும் கட்டடத்தில் போதிய இடவசதி இல்லாததாலும், மழை நாட்களில் கட்டடத்தினுள் மழை நீர் கசிவதாலும் பணிகளைத் தடையின்றி முன்னெடுக்க முடியாதுள்ளதாகத் தெரிவித்து, பணிமனையின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அண்மையில் பணிமனைக்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

ஹட்டன் வலயக் கல்விப் பணிமனையின் கீழ் சிங்களம், தமிழ் மொழி மூலமான சுமார் 140 பாடசாலைகள் நிர்வகிக்கப்பட்டு வருவதுடன், அங்கு சுமார் 80 ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

கல்விப் பணிமனை தற்காலிகமாகப் பழைய தொழில் ஆணையாளர் கட்டடத்தில் இயங்கவுள்ளதுடன், புதிய கட்டடமொன்றை அமைப்பதற்குப் பொருத்தமான காணி கண்டறியப்பட்ட பின்னர், ஹட்டன் வலயக் கல்விப் பணிமனை உட்பட பல அரச நிறுவனங்களை ஒரே கூரையின் கீழ் இயங்க வைக்கும் வகையில் பல்தேவை கட்டடம் ஒன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக மஞ்சுள சுரவீர ஆரச்சி மேலும் குறிப்பிட்டுள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஆலையடிவேம்பில் நவராத்திரி விழா கோலாகலம்!

அம்பாறை மாவட்டம், ஆலையடிவேம்பு பிரதேசத்தில் நவராத்திரி விழாவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்ட அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஊர்வலமும் கலை நிகழ்வுகளும் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ்…

49 0 0
இலங்கை செய்திகள்

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் முழுமையாகத் தலைவணங்கும் : ஜனாதிபதி உறுதி

நீதிமன்றப் பொறிமுறையினால் வழங்கப்படும் தீர்மானங்களே நாட்டின் சட்டம் தொடர்பான மிகச் சரியான இறுதித் தீர்மானங்களாகும் எனவும், அந்த அனைத்துத் தீர்மானங்களுக்கும் அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக்…

79 0 0
இலங்கை செய்திகள்

புளொட்டின் 46 வது ஆண்டு விழா சாவகச்சேரியில் இடம்பெற்றது!

தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் 46 வது ஆண்டு விழா இன்று மாலை சாவகச்சேரியில் இடம்பெற்றது. சாவகச்சேரி நகரசபையின் முன்னாள் உபநகரபிதா ஞா.கிஷோர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில்…

76 0 0
இலங்கை செய்திகள்

தேசிய மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ச

கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பிணை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நவலொக்க தனியார் மருத்துவமனைக்கு…

70 0 0