தேசிய மருத்துவமனையில் இருந்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் ஷிரந்தி ராஜபக்ச
கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுச் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் பிணை வழங்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதியின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மேலதிக மருத்துவ சிகிச்சைக்காக நவலொக்க தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
தேசிய மருத்துவமனையில் அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகளைத் தொடர்ந்து, தனியார் மருத்துவமனைக்கு மாற்றும் ஏற்பாடு மேற்கொள்ளப்பட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

