உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

‘ஃபோர்முலா 3’ கார் பந்தயத்தில் பங்கேற்கும் இலங்கையர்

95 பார்வைகள்

இலங்கை பந்தய வீரரான யெவன் டேவிட், 2027ஆம் ஆண்டுக்கான சர்வதேச ஃபோர்முலா 3 (FIA Formula 3) செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்பதற்காக நெதர்லாந்தின் வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் (Van Amersfoort Racing) அணியுடன் ஒப்பந்தம் செய்துள்ளார்.

19 வயதான யெவன் டேவிட், தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக ஃபோர்முலா 3 போட்டியில் பங்கேற்கவுள்ளார்.

2026ஆம் ஆண்டில் தனது அறிமுகப் பருவத்தில் போட்டியிட்ட அவர், 35 புள்ளிகளுடன் ஓட்டுநர்களுக்கான தரவரிசையில் 18ஆவது இடத்தைப் பெற்றார். அத்துடன், சில்வர்ஸ்டோனில் நடைபெற்ற ஸ்பிரிண்ட் பந்தயத்தில் இரண்டாவது இடத்தைப் பிடித்தமை அவரது சிறப்பான ஆட்டமாக அமைந்தது.

இதற்கு முன்னர், 2025ஆம் ஆண்டு யூரோஃபார்முலா ஓபன் செம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்ற யெவன் டேவிட், ஆறு வெற்றிகள் மற்றும் 14 முறை வெற்றிப் பீடமேறி, ஒட்டுமொத்த தரவரிசையில் இரண்டாவது இடத்தைப் பெற்றிருந்தார்.

வான் அமர்ஸ்ஃபோர்ட் ரேசிங் அணியுடனான ஒப்பந்தம் தனது பந்தய வாழ்க்கையில் சரியான முன்னேற்றமாக அமையும் என யெவன் டேவிட் தெரிவித்துள்ளார். அணியின் தலைமைத்துவம், அனுபவம் மற்றும் போட்டித்தன்மை மிக்க அணுகுமுறை குறித்தும் அவர் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை, அணியின் தலைவர் பிராட் ஜோய்ஸ், யெவன் டேவிட்டின் திறமையையும் சில்வர்ஸ்டோன் போட்டியில் அவர் வெளிப்படுத்திய ஆற்றலையும் பாராட்டியுள்ளார். 2027ஆம் ஆண்டில் அவரது அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு மேலும் சிறந்த பெறுபேறுகளைப் பெற எதிர்பார்ப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் சர்வதேச மோட்டார் பந்தயத் துறையில் தனது திறமையை மேலும் வளர்த்துக்கொண்டு, ஃபோர்முலா பந்தயப் பிரிவுகளில் முன்னேறுவதற்கான மற்றுமொரு வாய்ப்பு யெவன் டேவிட்டுக்குக் கிடைத்துள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20…

50 0 0
விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

70 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக…

56 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

89 0 0