உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
17 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

கால்பந்து வரலாற்றில் நானே சிறந்தவன்!

95 பார்வைகள்

கால்பந்து உலகை உலுக்கியுள்ள ஒரு முக்கிய நிகழ்வாக, போர்த்துக்கல் தேசிய அணியின் தலைவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ, அந்த அணியிலிருந்து தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். இதற்கிடையே, போர்த்துக்கல் தொலைக்காட்சிக்கு அவர் வழங்கிய பிரத்யேகப் பேட்டியில், கால்பந்து வரலாற்றிலேயே தான்தான் மிகச்சிறந்த வீரர் என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.

போர்த்துக்கல் அணியின் புதிய பயிற்சியாளர் ஜார்ஜ் ஜீசஸ் உடன் ஏற்பட்ட கடுமையான கருத்து வேறுபாடே இந்தச் சிக்கலுக்கு முக்கியக் காரணம். நார்வே அணிக்கு எதிரான போட்டியின் போது, ரொனால்டோவை நீண்ட நேரம் வார்ம் – அப் செய்யச் சொல்லியும், பின்னர் அவரை களமிறக்காமல் ஏமாற்றியதாகக் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், டென்மார்க் அணிக்கு எதிரான ஆட்டத்தில் தன்னைத் தொடக்க லெவன் அணியில் சேர்க்கவில்லை என்பதை அறிந்த அவர், அணி முகாமை விட்டு அதிரடியாக வெளியேறினார். இந்த ஒழுங்கீனச் செயலைக் கண்டித்து, போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனம் அவர் மீது அவசர ஒழுங்கு நடவடிக்கையைத் தொடங்கியுள்ளதுடன், அவரை அணியிலிருந்து தற்காலிகமாகச் சஸ்பெண்ட் செய்துள்ளது.

தனது சாதனைகள் குறித்துப் பேசிய ரொனால்டோ, தான் அடிக்கும் கோல்களும் தனது தற்போதைய ஃபார்மும் போதிய அளவில் மதிக்கப்படவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,

“மக்கள் எனது வடிவத்தையும், நான் அடிக்கும் கோல்களையும் சரியாகப் புரிந்துகொள்வதில்லை. ஆனால், எண்களும் சாதனைகளும் எதைக் கூறுகின்றனவோ அதுவே உண்மை. கால்பந்து வரலாற்றில் என்னைவிடச் சிறந்தவர் யாருமில்லை, நானே வரலாற்றின் சிறந்த வீரர்” என்று ஆணித்தரமாகத் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கிண்ண தொடரின் காலிறுதிக்கு முந்தைய சுற்றோடு போர்த்துக்கல் வெளியேறிய பிறகு, சர்வதேச கால்பந்திலிருந்து தான் முற்றிலுமாக ஓய்வுபெறத் திட்டமிட்டிருந்ததாகவும் ரொனால்டோ வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்காக அவர் ஒரு விடைபெறும் கடிதத்தை கூடத் தயார் செய்திருந்தாராம். இருப்பினும், போர்த்துக்கல் கால்பந்து சம்மேளனத் தலைவர் பெட்ரோ ப்ரோன்கா, விமானப் பயணத்தின் போது அவரிடம் பேசி அந்த முடிவை மாற்றச் செய்ததாக அவர் குறிப்பிட்டார்.

முகாமை விட்டு வெளியேறியதற்காகத் தன் சக வீரர்களுக்கும் நாட்டு மக்களுக்கும் ரொனால்டோ பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ளார். அதேசமயம், பயிற்சியாளர் தனக்கு அளித்த வாக்கை மீறியதே தனது கோபத்திற்குக் காரணம் என்றும் அவர் நியாயப்படுத்தியுள்ளார்.

சஸ்பெண்ட் காலம் முடிவடைந்த பிறகும், போர்த்துக்கல் அணிக்காகத் தொடர்ந்து விளையாடத் தயாராக இருப்பதாக அவர் உறுதி அளித்துள்ளார். இதற்கிடையே, சவுதி அரேபியாவின் அல் நாசர் கிளப் அணிக்குத் திரும்பியுள்ள அவர், தனது வழக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தி கோல் அடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

விளையாட்டுச் செய்திகள்

ஒரே ஓவரில் 5 விக்கெட்டுக்களை வீழ்த்தி சாதனை படைத்த தென்னாபிரிக்க வீரர்

தென்ஆப்பிரிக்காவை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் சாட் லேகாக் உள்நாட்டு 20 ஓவர் கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். சி.எஸ்.ஏ. புரோ 20…

50 0 0
விளையாட்டுச் செய்திகள்

Full Toss பந்துகளை வீசிவிட்டு ஆடுகளத்தைக் குறை கூறாதீர்கள்! – சுனில் கவாஸ்கர் கடும் விமர்சனம்

மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது T20 போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, ஆடுகளத்தைக் குறை கூறுவதற்குப் பதிலாகப் பந்துவீச்சாளர்களின் தவறுகளை ஆராய வேண்டும் என இந்திய…

70 0 0
விளையாட்டுச் செய்திகள்

சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளில் இருந்தும் திடீரென ஓய்வை அறிவித்த பூனம் ரவுட்!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னணி துடுப்பாட்ட வீராங்கனை பூனம் ரவுட், சர்வதேச கிரிக்கெட்டின் அனைத்து போட்டிகளிலிருந்தும் தனது ஓய்வை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்த ஓய்வு உடனடியாக…

56 0 0
விளையாட்டுச் செய்திகள்

ஐ.பி.எல் இல் டி.நடராஜனை 5கோடிக்கு வாங்கும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

இந்தியாவில் நடந்து வரும் ஐ.பி.எல். தொடரின் மூலம் சிறந்த வீரர்கள் அடையாளம் காணப்பட்டு, அவர்கள் இந்திய அணியில் சேர்க்கப்பட்டு வருகின்றனர். அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். ஏலம் இந்தியாவில்…

89 0 0