உள்ளடக்கத்திற்குச் செல்க
அக்டோபர் 2026
9 வெள்ளி
842 பேர் இப்போது பார்க்கின்றனர்

பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்க எதிர்ப்பு.!

இலங்கை செய்திகள் 1 மணி நேரம் முன்
72 பார்வைகள்

மஸ்கெலியா பிரதேச சபைக்குட்பட்ட சாமிமலை பகுதியில், பாடசாலைக்கு அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை ஒன்றை அமைக்க மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைக்கு கவரவலை தமிழ் வித்தியாலய மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

ஹட்டன் வலயக் கல்வி பணிமனைக்கு உட்பட்ட கோட்டம் மூன்றில் அமைந்துள்ள கவரவலை தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவு பகுதியில், ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான சாமிமலை, கவரவலை தோட்ட நிர்வாகத்தினால் இந்த தொழிற்சாலையை அமைப்பதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தரம் ஒன்று முதல் தரம் 11 வரை கல்வி பயிலும் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்த பாடசாலையில் கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், பாடசாலைக்கு மிக அருகில் கோப்பி அரைக்கும் தொழிற்சாலை அமைக்கப்பட்டால், தொழிற்சாலையின் இயந்திரங்களினால் ஏற்படும் சத்தம், வாகனங்களின் போக்குவரத்து மற்றும் தொழிலாளர்களின் நடமாட்டம் ஆகியவை மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

குறிப்பாக, தற்போது அமைந்துள்ள பாடசாலைக்கு அருகிலுள்ள தேயிலை தொழிற்சாலைக்கும் இடையிலான தூரம் கூட 5 மீற்றர் இல்லை என தெரிவிக்கப்படுகிறது. இதனால், கோப்பி அரைக்கும் தொழிற்சாலையை பாடசாலை அமைந்துள்ள பகுதியில் நிறுவுவதற்கு பதிலாக, ஏற்கனவே தேயிலைத் தொழிற்சாலை அமைந்துள்ள பகுதியில் நிறுவுமாறு தோட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கவரவலை தமிழ் வித்தியாலயம் நீண்ட வரலாற்றைக் கொண்ட பாடசாலை என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 125 ஆண்டுகளாக மூடப்பட்ட நிலையில் காணப்பட்ட இரண்டு மாடி கொட்டகையில் பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் இடம்பெற்று வந்துள்ளன.

சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்னர் அந்த கட்டிடம் இடிந்து விழும் நிலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து, புதிய கட்டிடம் அமைக்கப்பட்டு மாணவர்கள் அங்கு மாற்றப்பட்டனர். அதேவேளை, சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்னர் தரம் 6 முதல் உயர்தரம் வரையிலான வகுப்புகளுக்காக சாமிமலை நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு, கவரவலை தமிழ் மகா வித்தியாலயம் உருவாக்கப்பட்டது.

வரலாற்று ரீதியாக, குறித்த பழைய இரண்டு மாடி கொட்டகையின் கீழ்தளத்தில் தோட்ட முகாமையாளர் அலுவலகம், தோட்ட உத்தியோகத்தர்களின் அலுவலகம், தோட்ட காரியாலயம் மற்றும் பாடசாலை உள்ளிட்டவை இயங்கி வந்ததாகவும், மேல் மாடியில் சினிமா கொட்டகை அமைந்திருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அக்காலத்தில் வெள்ளையர்களின் நிர்வாக நடவடிக்கைகளும் அந்த கொட்டகையில் இடம்பெற்றதாக வரலாற்றுத் தகவல்கள் உள்ளன. பின்னர் தோட்ட காரியாலயம் கவரவலை தோட்ட தேயிலை தொழிற்சாலை பகுதிக்கு மாற்றப்பட்டு, அதன் பின்னர் தோட்ட முகாமையாளர் இல்லம் அமைந்துள்ள பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

காலப்போக்கில், தரம் ஒன்று முதல் உயர்தரம் வரையிலான மாணவர்களுக்கான ஒரே பாடசாலையாக கவரவலை தமிழ் வித்தியாலயம் இயங்கி வந்ததுடன், சாமிமலை, பெய்ந்தோர், ஓல்ட்டன், கவரவலை, மாநெலி, ஸ்டோக்ஹோம் மற்றும் ஸ்டரஸ்பி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மாணவர்கள் இங்கு கல்வி கற்றுள்ளனர்.

பின்னர் சாமிமலை நகருக்கு அருகில் புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டு உயர்தர வகுப்புகள் அங்கு மாற்றப்பட்டதைத் தொடர்ந்து, கவரவலை பாடசாலையில் ஆரம்ப மற்றும் இடைநிலை வகுப்புகளுக்கான கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்துள்ளன.

மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்ததையடுத்து, பாடசாலையின் கல்வி நடவடிக்கைகள் தரம் 11 வரை விரிவுபடுத்தப்பட்டுள்ளன.

தற்போது கவரவலை தோட்டத்தின் நான்கு பிரிவுகளில் வசிக்கும் தொழிலாளர்களின் பிள்ளைகளும், ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்திற்கு சொந்தமான ஓல்ட்டன் மற்றும் ஸ்டோக்ஹோம் தோட்டங்களில் பணிபுரியும் தொழிலாளர்களின் பிள்ளைகளும் இங்கு கல்வி கற்று வருகின்றனர்.

இந்நிலையில், தொழிற்சாலை அமைக்கும் நடவடிக்கை கைவிடப்படாவிட்டால், ஒக்டோபர் 7ஆம் திகதி முதல் மாணவர்களை பாடசாலையிலிருந்து அகற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படலாம் என பெற்றோர்கள் தங்களது கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.

எனவே, இந்த விடயத்தில் தோட்ட நிர்வாகம் மற்றும் ஹொரன பெருந்தோட்ட நிறுவனத்தின் உயர் அதிகாரிகள் உடனடியாக தலையிட்டு தீர்வை பெற்றுத்தர வேண்டும் எனவும், பெருந்தோட்டத்துறை அமைச்சர், கல்வி அமைச்சர் மற்றும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆகியோர் இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் சாமிமலை கவரவலை பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் புதிய சட்டமூலத்திற்கு எதிராக யாழில் போராட்டம்.!

அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள அரசை பயங்கரவாதத்தில் இருந்து பாதுகாக்கும் புதிய சட்ட மூலத்தை நீக்குமாறு கோரி வடக்கு, கிழக்கு சிவில் ஒருங்கிணைப்பு குழு…

26 0 0
இலங்கை செய்திகள்

சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கையளிப்பு.!

சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்கிரமரத்னவுக்கு எதிராக எதிர்க்கட்சியால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாடாளுமன்றச் செயலாளர் நாயகம் திருமதி குஷானி ரோகனதீரவிடம் இன்று கையளிக்கப்பட்டது. எதிர்க்கட்சியின் பிரதிப் பிரதம…

71 0 0
இலங்கை செய்திகள்

கறுப்பு ஜூலை போன்ற கலவரங்கள் மீண்டும் நிகழாமல் இருக்க புதிய அரசமைப்பு கட்டாயம் உருவாக்கப்பட வேண்டும்.!

இலங்கையில் எதிர்காலத்தில் கறுப்பு ஜூலை போன்ற மற்றுமொரு இனக்கலவரம் உருவாகாமல் தடுப்பதற்குத் தமிழ் மக்கள் சம உரிமையுடன் வாழக்கூடிய வகையிலான புதிய அரசமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும்…

55 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பில் வெடித்த போராட்டம்.!

பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலத்திற்கு எதிராகவும், மக்களின் ஜனநாயக மற்றும் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கிலும் ஏற்பாடு செய்யப்பட்ட கவனயீர்ப்பு போராட்டம் இன்று (09) மட்டக்களப்பு நகரில்…

36 0 0