உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
15 செவ்வாய்

அநுராதபுர பேரணியில் புலிப் பிரசார குற்றச்சாட்டு : விசாரணைகள் ஆரம்பம்!

இலங்கை செய்திகள் 36 நிமிடங்கள் முன்
7 பார்வைகள்

அநுராதபுரத்தில் நடைபெற்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பேரணியில், தடைசெய்யப்பட்ட புலிகள் அமைப்பை ஊக்குவிக்கும் வகையில் கருத்துக்கள் வெளியிடப்பட்டதாகக் கூறி குற்றவியல் புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) செய்யப்பட்ட முறைப்பாடு, மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத புலனாய்வுப் பிரிவிடம் (TID) ஒப்படைக்கப்பட்டுள்ளது.

காவல்துறை மா அதிபரின் பணிப்புரைக்கு அமைவாகவே இந்த விசாரணை பயங்கரவாத விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் உதவி காவல்துறை அத்தியட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்துள்ளார்.

குறித்த பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள், இலங்கையில் தடைசெய்யப்பட்ட அமைப்பான விடுதலைப் புலிகளை ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி, “ஒன்றிணைந்த எதிர்க்கட்சி” என தங்களை அடையாளப்படுத்தும் சிவில் சமூக அமைப்பினரால் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டது.

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோர் கலந்துகொண்ட இந்தப் பேரணியில் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்து எதிர்க்கட்சியினரும் கவலை வெளியிட்டிருந்தனர்.

குறித்த பேரணியில் உரையாற்றிய நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா , தன்னை ஒரு “புலி” எனக் குறிப்பிட்டதுடன், “நரியை” ஆட்சிக்குத் தேர்ந்தெடுத்துள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை மறைமுகமாகச் சுட்டிக்காட்டி விமர்சித்திருந்தார்.

விடுதலைப் புலிகள் அமைப்பு தொடர்பான கருத்துக்களுக்குக் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டு வரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவாளர்கள் சிலருக்கே இக்கருத்துக்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்த போதிலும், மேடையில் விடுதலைப் புலிகள் பற்றிப் பேசப்பட்ட போது அங்கிருந்த சில ஆதரவாளர்கள் ஆரவாரம் செய்தமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

முன்னாள் இராஜாங்க அமைச்சர் பிள்ளையானுக்கு விளக்கமறியல் நீடிப்பு

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர், பிள்ளையான் என அழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில்…

48 0 0
இலங்கை செய்திகள்

மேல் மாகாண போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவர் கைது

மேல் மாகாண வீதி மற்றும் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் முன்னாள் தலைவரான பிரசன்ன சஞ்சீவ, இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவினால்…

44 0 0
இலங்கை செய்திகள்

இந்த ஆண்டில் இதுவரை 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவு!

இவ்வாண்டில் இதுவரை இலங்கையில் 37 துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று (15) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை…

47 0 0
இலங்கை செய்திகள்

கொழும்பு, ஸ்டேடியம்கம ‘Port View Residencies’ புதிய அடுக்குமாடி வீடமைப்புத் தொகுதி மக்களிடம் கையளிப்பு.!

கொழும்பு நகர்ப்புற மக்களுக்கு சிறந்த வீடமைப்பு வசதிகளை வழங்கி வைக்கும் நோக்கில், கொழும்பு 14, கிராண்ட்பாஸ், ஸ்டேடியம்கம பகுதியில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட “Port View Residencies” அடுக்குமாடி…

48 0 0