உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

22 ஆவது திருத்தத்துக்கு எதிராக செப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம்

இலங்கை செய்திகள் 11 மணி நேரம் முன்
20 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி வழியிலான ஆர்ப்பாட்டம் எதிர்வரும் 24 ஆம் திகதி கொழும்பில் முன்னெடுக்கப்படவுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார். இதற்காக அனைத்து முற்போக்கு மக்களின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றார் என்றும் அவர் குறிப்பிட்டார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பு எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே எதிர்க்கட்சித் தலைவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அநுர குமார திஸாநாயக்க தலைமையிலான அரசு ஜனநாயகத்தையும், நீதிமன்றத்தின் சுதந்திரத்தையும், சட்டத்தின் ஆட்சியையும் சீரழித்து வருகின்றது. 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக முதன்முதலில் ஐக்கிய மக்கள் சக்தியே குரல் கொடுத்தது. எதிர்காலத்தில் இதற்கு எதிரான நடவடிக்கைகளையும் முன்னெடுப்புகளையும் ஜனநாயக ரீதியில் மேலும் வலுப்படுத்துவோம்.

தற்போது நாடு பாரிய சவால்களை எதிர்கொண்டுள்ளது. தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், இந்த 22 ஆவது திருத்தத்தின் ஊடாக ஜனநாயகத்தை அழித்து, தனிக்கட்சி ஆட்சியைக் கொண்டுவந்து, நாட்டின் அதிகாரத்தைப் பெலவத்தைக்குக் கொண்டு செல்லும் முயற்சியைத் தோற்கடிக்க வேண்டும்.

மக்களை ஏமாற்றி மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொண்டனர். நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்கள் தேசிய மக்கள் சக்திக்கு உண்டு என்பதற்காக, 220 இலட்சம் மக்களின் உரிமைகளை நசுக்க இடமளிக்க முடியாது. இதற்கு எதிராகப் பெரும் மக்கள் பலத்தைத் திரட்டுவோம்.

பிரஜைகளுக்கும் எதிர்கால சந்ததியினருக்கும் எதிராகக் கொண்டுவரப்படும் இந்த மோசமான 22 ஆவது திருத்தத்தைத் தோற்கடிப்பதற்கான பெரும் நடவடிக்கை எடுக்கப்படும். இது அரசின் மாற்றத்துக்கு வழிவகுக்கும்.

அரசின் சர்வாதிகார ஆட்சியைத் தோற்கடிக்கும் முதல் அடியைச் எதிர்வரும் செப்டெம்பர் 24 ஆம் திகதி ஐக்கிய மக்கள் சக்தி பதிக்கும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை…

55 0 0
இலங்கை செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘போ@தைப்பொருள் லேகியம்’ விற்பனை : சந்தேக நபர்  கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

41 0 0
இலங்கை செய்திகள்

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சட@லம் அடையாளம் காணப்பட்டது!

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை அம்பாறை…

62 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு! அக்கரைப்பற்று, செப். 13ஜே.கே.யதுர்ஷன் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ…

59 0 0