உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘போ@தைப்பொருள் லேகியம்’ விற்பனை : சந்தேக நபர்  கைது!

இலங்கை செய்திகள் 9 மணி நேரம் முன்
41 பார்வைகள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் அக்கரைப்பற்று  வன்னியர் வீதியில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 9 கிலோகிராம் எடையுள்ள கஞ்சா கலந்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அக்கரைப்பற்று பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இச் சோதனை நடவடிக்கையின் போது குறித்த லேகியம் கைப்பற்றப்பட்டுள்ளது.

அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்  சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் அக்கரைப்பற்று உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ஆகியோரின் வழிகாட்டலில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் ஊழல் ஒழிப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி யூ.எல்.எஸ். ஆப்தீன் தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக் கைது நடவடிக்கையை முன்னெடுத்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை…

54 0 0
இலங்கை செய்திகள்

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சட@லம் அடையாளம் காணப்பட்டது!

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை அம்பாறை…

62 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு! அக்கரைப்பற்று, செப். 13ஜே.கே.யதுர்ஷன் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ…

58 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தத்துக்கு எதிராக செப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம்

படங்கள், வீடியோ இணைப்பு – 22 ஆவது திருத்தத்துக்கு எதிராகசெப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம் அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி வழியிலான…

19 0 0