உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சட@லம் அடையாளம் காணப்பட்டது!

இலங்கை செய்திகள் 10 மணி நேரம் முன்
62 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், மாவடிப்பள்ளி ஆற்றுப் பகுதியில் இன்று (13) கரையொதுங்கிய நிலையில் மீட்கப்பட்ட இனந்தெரியாத ஆண் சடலம் தற்போது அடையாளம் காணப்பட்டு, உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் குறித்து ஊடகங்களில் செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து, குறித்த சடலம் சாய்ந்தமருது, பழைய சந்தை வீதியைச் சேர்ந்த 29 வயதுடைய அஸ்ஜத் என்ற இளைஞனுடையது என அவரது உறவினர்களால் அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

குறித்த இளைஞன் காணாமல் போயிருந்த நிலையில், அது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டு உறவினர்களால் தேடப்பட்டு வந்த நிலையிலேயே இன்று சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

சம்பவ இடத்திற்கு விரைந்த காரைதீவு பொலிஸார் முதற்கட்ட விசாரணைகளை மேற்கொண்டனர். அதனைத் தொடர்ந்து, சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி நூர்டீன் சர்ஜூன்  உத்தரவிற்கமைய, திடீர் மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீத் அல் ஜவாஹிர் சம்பவ இடத்திற்கு நேரடியாகச் சென்று விசாரணைகளை முன்னெடுத்தார்.

மரண விசாரணைகள் நிறைவடைந்த பின்னர்  இளைஞனின் ஜனாஸா மேலதிக இறுதிக்கிரியைகளுக்காக உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சம்பவம் தொடர்பில் காரைதீவு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை…

54 0 0
இலங்கை செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘போ@தைப்பொருள் லேகியம்’ விற்பனை : சந்தேக நபர்  கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

41 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு! அக்கரைப்பற்று, செப். 13ஜே.கே.யதுர்ஷன் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ…

58 0 0
இலங்கை செய்திகள்

22 ஆவது திருத்தத்துக்கு எதிராக செப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம்

படங்கள், வீடியோ இணைப்பு – 22 ஆவது திருத்தத்துக்கு எதிராகசெப். 24 கொழும்பில் ஆர்ப்பாட்டம் அரசமைப்பின் 22 ஆவது திருத்தத்துக்கு எதிராக மக்களை அணிதிரட்டி, அமைதி வழியிலான…

19 0 0