உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கல்முனை முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் 16ஆவது இரத்ததான முகாம்

இலங்கை செய்திகள் 12 மணி நேரம் முன்
35 பார்வைகள்

“இரத்ததானம் செய்வோம்; ஓர் உயிரைக் காப்போம்” என்ற உயரிய மனிதநேய நோக்குடன், கல்முனை பிராந்தியத்தில் இரத்ததானப் பணியை முதன்முதலில் அறிமுகப்படுத்திய கல்முனை 08, தைக்கா வீதியில் அமைந்துள்ள முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித்தின் ஏற்பாட்டில் 16ஆவது இரத்ததான முகாம் இன்று (12) மஸ்ஜிதின் மேல் மாடியில் சிறப்பாக நடைபெற்றது.

மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். பாறூக் பிரதம அதிதியாகவும், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் கல்முனை பிராந்திய பொறியியலாளர் இசட்.ஏ.எம். அஷ்மிர் விசேட அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

அத்துடன் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் இரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் கே.யு. வித்யா உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களும், கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசலின் தலைவர் எம்.ஐ. இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகத்தினரும் பிரசன்னமாகியிருந்தனர்.

நிகழ்வில் உரையாற்றிய மஸ்ஜிதின் உப தலைவர் எம்.எம். அப்துல் றஹ்மான், “இரத்ததானம் என்பது விபத்துகள், சத்திரசிகிச்சைகள் மற்றும் பல்வேறு நோய்களால் பாதிக்கப்படுவோரின் உயிரைக் காப்பாற்ற உதவும் உன்னதமான மனிதநேயச் செயலாகும்” எனச் சுட்டிக்காட்டினார்.

தொடர்ந்து உரையாற்றிய மஸ்ஜித் தலைவர் எம்.ஜே. அப்துஸ் ஸமது, “மஸ்ஜித் என்பது வெறுமனே தொழுகைக்கான இடமாக மட்டுப்படுத்தப்படாமல், சமூக நலன் மற்றும் மனிதநேயப் பணிகளிலும் பங்களிக்க வேண்டிய முக்கியமான சமூக நிறுவனமாகும். உயிர்களைக் காப்பாற்றும் இப்பணியை எதிர்காலத்திலும் தொடர்வதற்கான அர்ப்பணிப்பு எமக்குள்ளது” எனத் தெரிவித்தார்.

நிகழ்வில் உரையாற்றிய பிரதி வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். பாறூக், “வைத்தியசாலைகளில் இரத்தக் கையிருப்பைப் பேணுவதற்கு இவ்வாறான தொடர்ச்சியான முகாம்கள் பெரிதும் உதவுகின்றன. முஹம்மதியா ஜும்ஆ மஸ்ஜித் முன்னெடுத்து வரும் இச்சேவை மிகவும் பாராட்டத்தக்கது” எனத் தெரிவித்து, இரத்ததானம் வழங்கியோருக்கு நன்றியினைத் தெரிவித்தார்.

இவ் இரத்ததான முகாமின் நெறிப்படுத்தல் பணிகளை உப தலைவர்களான எம்.எம். அப்துல் றஹ்மான் மற்றும் ஏ.எம்.எம்.ஏ. அத்னான் ஆகியோர் மேற்கொண்டதுடன், இறுதியாக மஸ்ஜித் செயலாளர் கே.எல். சுபைர் நன்றியுரை நிகழ்த்தினார்.

இளைஞர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் திரளாகப் பங்கேற்று இரத்ததானம் வழங்கியமை குறிப்பிடத் தக்கதஎல்-

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

சாய்ந்தமருதில் பெண்களுக்கான நவீன சமையற்கலை செயலமர்வு

சாய்ந்தமருது பிரதேச செயலகப் பிரிவுக்குள் இளம் பெண் தொழில் முயற்சியாளர்களை உருவாக்கும் உயரிய நோக்கோடு, எடின்பரோ (Edinborough) நிறுவனத்தின் அனுசரணையுடன் “பல் சுவை வசந்தம்” இலவச சமையற்கலை…

55 0 0
இலங்கை செய்திகள்

ஆயுர்வேத கடை என்ற போர்வையில் ‘போ@தைப்பொருள் லேகியம்’ விற்பனை : சந்தேக நபர்  கைது!

ஆயுர்வேத கடை என்ற போர்வையில்    கஞ்சா கலந்த லேகியம் விற்பனை செய்து வந்த  சந்தேக நபரை  இன்று (13) பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை மாவட்டம்…

41 0 0
இலங்கை செய்திகள்

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சட@லம் அடையாளம் காணப்பட்டது!

மாவடிப்பள்ளி ஆற்றில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது: சாய்ந்தமருது இளைஞனின் சடலம் உறவினர்களிடம் ஒப்படைப்பு நீதவானின் உத்தரவின் பேரில் திடீர் மரண விசாரணை அதிகாரி விசாரணை அம்பாறை…

62 0 0
இலங்கை செய்திகள்

கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு!

ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்புடன் கோலாகலமாக இடம்பெற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய குடமுழுக்கு! அக்கரைப்பற்று, செப். 13ஜே.கே.யதுர்ஷன் கிழக்கிலங்கையின் வரலாற்றுச் சிறப்புமிக்க அக்கரைப்பற்று அருள்மிகு ஸ்ரீ…

59 0 0