உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
9 புதன்

ஜனாதிபதி அநுரவுடன் இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் சந்திப்பு.!

இலங்கை செய்திகள் 2 மணி நேரம் முன்
114 பார்வைகள்

இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் இன்று (09) ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இந்த விஜயத்தின் போது இந்திய பாதுகாப்பு அமைச்சர், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயர் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொந்த (ஓய்வு) உள்ளிட்ட பலரையும் சந்திக்கவுள்ளார்.

கடந்த ஆண்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது கையெழுத்திடப்பட்ட இந்திய – இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை அமல்படுத்துவது குறித்தும் இந்த விஜயத்தின் போது மீளாய்வு செய்யப்படவுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

38 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்வது ஒரு சிறப்பு அம்சமாகும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இரு ஆண்டுகளில் மக்களை ஏமாற்றியுள்ளது.!

எதுல்கோட்டேயிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமை அலுவலகத்தில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுஜித் சஞ்சய பெரேரா, தேசிய…

98 0 0
இலங்கை செய்திகள்

கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்து குப்பைகள் சரிவு.!

கடந்த சில நாட்களாக நுவரெலியா மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வந்த கன மழை காரணமாக சிவனடிபாத மலை உச்சியில் இருந்த குப்பைகள் சரிந்துள்ளது. தற்போது அடிக்கடி இவ்வாறான…

107 0 0
இலங்கை செய்திகள்

பலத்த காற்று தொடர்பில் விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை.!

ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையிலான கடற்பரப்புகளுக்காகப் பலத்த காற்று மற்றும் கொந்தளிப்பான கடல் நிலைமை குறித்து எச்சரிக்கை அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இன்று (09) முற்பகல் 11 மணிக்கு…

100 0 0
இலங்கை செய்திகள்

இலங்கைக்கு உலக சுகாதார அமைப்பின் உயரிய கௌரவம்.!

இலங்கையின் பொதுச் சுகாதாரத் துறையில் எட்டப்பட்டுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க இரு சாதனைகளைப் பாராட்டி, உலக சுகாதார அமைப்பு (WHO) இலங்கைக்கு உயரிய அதிகாரப்பூர்வ கௌரவச் சான்றிதழை வழங்கிச்…

82 0 0