உள்ளடக்கத்திற்குச் செல்க
நவம்பர் 2026
21 சனி
4210 பேர் இப்போது பார்க்கின்றனர்

லொனக் தோட்ட பெனச் பிரிவு உள்ளக வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை

Uncategorized 3 மாதங்கள் முன்
123 பார்வைகள்

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வட்டவளை–லொனக் பிரதான வீதியிலிருந்து பெனச் (மீனாட்சி) தோட்டத்திற்குச் செல்லும் சுமார் 750 மீற்றர் நீளமான உள்ளக வீதியை கொங்கிறீட் செய்து புனரமைக்குமாறு அம்பகமுவ பிரதேச சபையிடம் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அம்பகமுவ பிரதேச சபைக்குட்பட்ட லொனக் தோட்டம், மிகவும் கஷ்டப் பிரதேசமாக காணப்படுவதுடன், தோட்டத்திற்கான பிரதான வீதி இதுவரை முழுமையாக புனரமைக்கப்படாததால் மக்கள் போக்குவரத்தில் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரதான வீதியை முழுமையாக புனரமைப்பதற்குத் தேவையான நிதி வளம் பிரதேச சபையிடம் இல்லாததை தாம் புரிந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள மக்கள், குறைந்தபட்சம் உள்ளக வீதிகளையாவது புனரமைத்துத் தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறிப்பாக, வட்டவளை–லொனக் பிரதான வீதியிலிருந்து பெனச் (மீனாட்சி) தோட்டத்திற்குச் செல்லும் சுமார் 750 மீற்றர் நீளமான உள்ளக வீதியை கொங்கிறீட் செய்து தருமாறு அம்பகமுவ பிரதேச சபை தவிசாளர் கப்பில நாகந்தலவிடம் பொதுமக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

மேலும், இதே கோரிக்கை தொடர்பில் அம்பகமுவ பிரதேச சபையின் பிரதி தவிசாளர் இரா. இராஜேந்திரனுக்கும் மக்கள் கடிதம் மூலம் அறிவித்துள்ளனர்.

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு தமது நீண்டகால போக்குவரத்து பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்ப்பதாக பெனச் தோட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

விளம்பரம்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

சவூதி எண்ணெய் கட்டமைப்புகள் மீது தாக்குதல்!

சவூதி அரேபியாவின் கிழக்கு – மேற்கு எண்ணெய் குழாய் மார்க்கத்தில் அமைந்துள்ள இரண்டு எண்ணெய் உற்பத்தி ஆலைகளை குறிவைத்து ஐந்து ஆளில்லா வானூர்திகள் மூலம் தாக்குதல் நடத்தியதாக…

87 0 0
Uncategorized

தானாகவே திறந்த விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள்!

நிலவும் சீரற்ற வானிலை காரணமாக விக்டோரியா நீர்த்தேக்கத்தின் 4 வான் கதவுகள் தானாகவே திறக்கப்பட்டுள்ளன. தற்போது தீவிரமடைந்துள்ள இடைப் பருவமழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் இன்றைய…

120 0 0
Uncategorized

மன்னார் பொது வைத்தியசாலையில் முதன்முறையாக மூளைச்சாவடைந்தவரின் உறுப்புகள் தானம்!

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் வரலாற்றில் ஒரு முக்கியமான மனிதநேய நிகழ்வாக, முதன்முறையாக அதி தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவந்த மூளைச்சாவடைந்த நோயாளி ஒருவரின் உறுப்புகள்…

168 0 0
Uncategorized

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா

கிழக்கு பல்கலைக்கழகத்தின் 30ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (03) வெகுவிமரிசையாக நடைபெற்றது. 2026ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டமளிப்பு விழா, மட்டக்களப்பு பிள்ளையாரடியில் அமைந்துள்ள பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான…

263 0 0