உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
6 ஞாயிறு

2016 ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்த கோரிக்கை

இலங்கை செய்திகள் 4 நாட்கள் முன்
84 பார்வைகள்

2016ஆம் ஆண்டில் நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 500 மில்லியன் ரூபா பெறுமதியான ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு, புதிய தொழிலாளர் முன்னணியின் பொதுச் செயலாளரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பில் ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

ஹட்டன் நகரில் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 2016ஆம் ஆண்டு 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்ட போதிலும், இதுவரை குறித்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என முரளி ரகுநாதன் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக ஹட்டன் நகர பேருந்து நிலையம், அதனைச் சுற்றியுள்ள வீதிகள் மற்றும் ஏனைய அத்தியாவசிய உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வேண்டிய அவசரத் தேவை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பல ஆண்டுகளாக இப்பிரச்சினைகள் தீர்க்கப்படாமல் இருப்பதால் ஹட்டன் மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கி வருவதாகவும், அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என எதிர்பார்த்திருந்த மக்களிடையே தற்போது ஏமாற்றமும் அதிருப்தியும் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனவே, இந்த விடயத்தை ஜனாதிபதி தனிப்பட்ட முறையில் கவனத்தில் கொண்டு, எவ்வித தாமதமுமின்றி ஹட்டன் நகர அபிவிருத்தித் திட்டத்தை ஆரம்பித்து நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்க வேண்டும் என முரளி ரகுநாதன் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், ஹட்டன் மக்களின் நலனைக் கருத்திற்கொண்டு ஜனாதிபதி இவ்விடயத்தில் உடனடி நடவடிக்கை எடுப்பார் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

நாமல் ராஜபக்ஷ விசேடமானவர் அல்லர்; சட்டத்தின் முன் அனைவரும் சமம்.!

நாட்டின் சட்டத்தையும் நீதியையும் நடைமுறைப்படுத்தும் நிறுவனங்களை வலுப்படுத்துவதே தற்போதைய அரசாங்கத்தின் முதன்மை நோக்கம் என்றும், சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமமானவர்களே என்றும் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க…

80 0 0
இலங்கை செய்திகள்

முகநூல் களியாட்ட நிகழ்வு; 41 பேர் கைது.!

தெல்தெனிய, விக்டோரியா பகுதியில் நடத்தப்பட்ட முகநூல் களியாட்ட நிகழ்வு ஒன்றை சுற்றிவளைத்து 36 ஆண் சந்தேகநபர்களையும் 5 பெண் சந்தேகநபர்களையும் பொலிஸார் கைது செய்துள்ளனர். தெல்தெனிய பொலிஸ்…

78 0 0
இலங்கை செய்திகள்

தந்தையை கொ*லை செய்த மகன்.!

மாத்தளை, உக்குவளை பகுதியில் மகனால் கூர்மையான ஆயுதத்தால் தாக்கப்பட்டு தந்தை படுகொலை செய்யப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் உக்குவளை, மாத்தளை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய நபர் ஆவார். இருவருக்கும்…

81 0 0
இலங்கை செய்திகள்

செவ்வாயன்று கொழும்பு வருகின்றார் இந்தியப் பாதுகாப்பு அமைச்சர்.!

இந்தியப் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணமாக நாளை மறுதினம் செவ்வாய்க்கிழமை கொழும்பு வரவுள்ளார். இந்தப் பயணத்தின்போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்பு, கடல்சார்…

55 0 0