உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

மட்டக்களப்பில் சோக சம்பவம்: வாளி நீரில் மூழ்கி 2 வயது குழந்தை உயிரிழப்பு

இலங்கை செய்திகள் 1 வாரம் முன்
146 பார்வைகள்

மட்டக்களப்பு – கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது.

கற்சேனை, முல்லை வீதியைச் சேர்ந்த 2 வயதும் 8 மாதங்களுமான நந்தகோபன் கிசோத் என்ற சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இந்த துயரச் சம்பவம் இன்று காலை சுமார் 10.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சிறுவன் வீட்டின் வாசலில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளியின் அருகே விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்போது எதிர்பாராத விதமாக சிறுவன் தலைகீழாக வாளிக்குள் விழுந்து, அதிலிருந்த நீரில் மூழ்கியுள்ளார். இதனால் சிறுவனுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது.

சிறுவன் நீரில் மூழ்கியிருப்பதை அவதானித்த உறவினர்கள் உடனடியாக அவரை மீட்டு பழுகாமம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

எனினும், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே சிறுவன் உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

இதனையடுத்து, மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றத்தின் கட்டளைக்கு அமைவாக திடீர் மரண விசாரணை அதிகாரி வீ.ஆர். மகேந்திரன் பழுகாமம் வைத்தியசாலைக்கு சென்று சடலத்தை பார்வையிட்டதுடன், சிறுவனின் உறவினர்களிடமும் விசாரணைகளை மேற்கொண்டுள்ளார்.

உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக சிறுவனின் சடலம் இன்று மாலை 6.00 மணியளவில் பழுகாமம் வைத்தியசாலையிலிருந்து களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

சிறுவனின் திடீர் உயிரிழப்பு கற்சேனை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0