உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஒரே நாளில் கோடிகளை அள்ளிய தெஹிவளை மிருகக்காட்சிசாலை!

இலங்கை செய்திகள் 6 நாட்கள் முன்
99 பார்வைகள்

பாடசாலை விடுமுறைக் காலத்தை முன்னிட்டு கடந்த 26 ஆம் திகதி தெஹிவளை விலங்கியல் பூங்காவைப் (மிருகக்காட்சிசாலை) பார்வையிடுவதற்காக 10,634 பார்வையாளர்கள் வருகை தந்துள்ளதாக தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆர்.சி.ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, அன்றைய தினம் மாத்திரம் 2.5 மில்லியன் ரூபா சாதனை அளவிலான வருமானத்தை ஈட்ட முடிந்துள்ளதாக பணிப்பாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

விலங்கியல் பூங்காவிற்கு வருகை தரும் வழமையான நாளாந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சுமார் 2,500 ஆகக் காணப்படும் நிலையில், அன்றைய தினம் வருகை தந்தவர்களின் எண்ணிக்கை வழமையை விட நான்கு மடங்குக்கும் அதிகமாகும் என பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், கடந்த வருடம் பெறப்பட்ட 1.6 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை இந்த வருடத்தில் கடந்து செல்ல முடியும் என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

தற்போது விலங்கியல் பூங்காவிற்குள் பார்வையாளர்களுக்கான உள்ளக வசதிகள் மேம்படுத்தப்பட்டுள்ளதுடன், பாடசாலை மாணவர்களுக்காக தினசரி விசேட திட்டங்களும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

பல்வேறு விலங்கு பரிமாற்றத் திட்டங்களின் கீழ், தற்போது பூங்காவில் பற்றாக்குறையாக உள்ள ஒட்டகச்சிவிங்கிகளுக்காக எதிர்வரும் அக்டோபர் மாதத்தில் உகாண்டாவிலிருந்து இரண்டு ஜோடி ஒட்டகச்சிவிங்கிகளையும், ஆர்மீனியாவிலிருந்து ஒரு ஜோடி வரிக்குதிரைகளையும் (Zebras) நாட்டிற்குக் கொண்டு வருவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

130 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

114 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

111 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0