உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
2 புதன்

பலகை தொழிற்சாலை அமைக்கும் முயற்சி தொழிலாளர்களின் எதிர்ப்பால் இடைநிறுத்தம்.! .

இலங்கை செய்திகள் 17 மணி நேரம் முன்
72 பார்வைகள்

கொட்டகலை ரொப்கில் தோட்டப் பகுதியில் மரப்பலகை ஆலை ஒன்றை அமைப்பதற்காக தோட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை, தோட்டத் தொழிலாளர்களின் எதிர்ப்பைத் தொடர்ந்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

ரொப்கில் தோட்ட நுழைவாயில் பகுதியில் குறித்த பலகை ஆலையை அமைப்பதற்கான அடித்தளத்தை நிர்மாணிக்கும் நோக்கில், அப்பகுதியில் காணப்பட்ட தேயிலைச் செடிகளை அகற்றும் நடவடிக்கையை தோட்ட நிர்வாகம் இன்று முன்னெடுக்க முற்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் எதிர்ப்பால் முயற்சி நிறுத்தப்பட்டது.

மர ஆலை அமைக்கப்பட உள்ள காணி மறைந்த முன்னாள் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானால் அவர்கள் தோட்ட தொழிலாளர்களுக்கு அக் காணியில் வீடமைப்பு திட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அப்போது தோட்ட நிர்வாகமும் எம்.பி.ஆரோ நிறுவனம் இணைந்து தடுத்து நிறுத்த ஏற்பாடு செய்தது.

மாறாக காலங்கள் கடந்த நிலையில் தற்போது அத் தோட்ட நிர்வாகம் அதே காணியில் மர ஆலை அமைக்க நடவடிக்கை எடுத்து அப் பகுதியில் உள்ள தேயிலை செடிகளை அகற்ற முயன்ற நிலையில் அத் தோட்டத்தில் உள்ள அனைத்து தொழிலாளர்களும் ஒன்றிணைந்து அந்த மர ஆலை அமைக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

22வது திருத்தம் – மனுக்கள் மீதான பரிசீலனை இன்றும் தொடரும்..!

22வது திருத்த சட்டமூலத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணை இன்று (02) காலை மீண்டும் ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.  உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் மீதான…

45 0 0
இலங்கை செய்திகள்

தந்தை செல்வாவின் நினைவுத் தூபி உடைப்பு: தமிழரசுக் கட்சி கடும் கண்டனம்

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் நினைவுத் தூபி இனந்தெரியாத நபர்களால் உடைத்துச் சேதமாக்கப்பட்ட சம்பவத்துக்கு தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் கடும் கண்டனம்…

67 0 0
இலங்கை செய்திகள்

விரிவுரையாளர்கள் போராட்டத்தில் குதிப்பு!

பல்கலைக்கழக அமைப்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை வழங்க அரசாங்கம் தவறியுள்ளதன் காரணமாக, அனைத்து அரச பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் இன்று (02) போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக பல்கலைக்கழக…

30 0 0
இலங்கை செய்திகள்

அபிவிருத்தி திட்டங்கள் குறித்து ஆராய்வு

அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பில் ஆராயும் விசேட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நேற்று (01) அம்பாறை மாவட்ட செயலகத்தின் ‘ஏ.ஐ. விக்கிரம’ கேட்போர் கூடத்தில்…

44 0 0