கடலில் மூழ்கி மாயமான சிறுவனின் ச*டலம் மீட்பு.!
ஜா-எல, பமுனுகம பகுதியில் அமைந்துள்ள எபமுல்ல கடற்கரையில் நீராடச் சென்று ராட்சத அலையில் இழுத்துச் செல்லப்பட்டு மாயமான 13 வயது சிறுவனின் சடலம் நேற்று (31) திங்கட்கிழமை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
ஞாயிற்றுக்கிழமை (30) பிற்பகல் வேளையில் கடலில் நீராடச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயார், அவரது மகள் உட்பட 4 பேர் பலத்த அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
முன்னதாக நேற்றையதினம் காலை மேற்கொள்ளப்பட்ட தீவிரத் தேடுதலில் 35 வயதுடைய தாய் மற்றும் 4 வயது மற்றும் 12 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்கள் மீட்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மாயமான சிறுவனின் உடலும் மீட்கப்பட்டுள்ளது.
சம்பவம் நடந்ததிலிருந்து பொலிஸாரும், கடற்படை மற்றும் அப்பகுதி கடலோர மீட்புக் குழுவினரும் இணைந்து எபமுல்ல கடற்கரைப் பகுதி முழுவதும் தீவிரத் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்த நிலையிலேயே அனைத்து உடல்களும் மீட்கப்பட்டுள்ளன.