உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

அஜித் படத்தில் ஷாலினி நடிக்கிறாரா?

சினிமா 2 வாரங்கள் முன்
69 பார்வைகள்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான அஜித்குமார், ‘குட் பேட் அக்லி’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘டேர் டெவில்’ திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இத்திரைப்படத்தை அஜித்தின் மனைவி ஷாலினி தயாரிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கார் பந்தயத்தில் கவனம் செலுத்தி வரும் அஜித்குமார், விரைவில் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பில் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், புதிய திரைப்படத்தில் ஷாலினியை சிறப்புத் தோற்றத்தில் நடிக்க வைக்க இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் முயற்சி செய்ததாகவும், எனினும் ஷாலினி நடிக்க விருப்பமில்லை என திட்டவட்டமாக மறுத்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

அஜித்குமாரை திருமணம் செய்த பின்னர் திரைப்படங்களில் நடிப்பதை ஷாலினி நிறுத்திக்கொண்டார். 2001ஆம் ஆண்டு வெளியான ‘பிரியாத வரம் வேண்டும்’ திரைப்படமே அவர் இறுதியாக நடித்த படமாகும். இப்படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக ஷாலினி நடித்திருந்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!

தமிழ்நாட்டின்,சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் “எனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி” எனக் கூறினார்.…

164 0 0
சினிமா

ராமராஜன் மற்றும் இளையராஜாவை மீண்டும் இணைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில்…

164 0 0
சினிமா

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், குடும்ப உறவுகள்…

129 0 0
சினிமா

மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆபரேஷன் கங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால்…

82 0 0