உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

பிரபல ஹொலிவூட் நடிகர் டிம் கரி காலமானார்!

சினிமா 2 வாரங்கள் முன்
95 பார்வைகள்

‘தி ரொக்கி ஹெரர் பிக்சர் ஷோ’ (The Rocky Horror Picture Show) திரைப்படத்தில் ஃபிராங்க்-என்-ஃபர்டராக நடித்து உலகப் புகழ் பெற்ற பிரபல ஆங்கில நடிகர் டிம் கரி (Tim Curry) தனது 80ஆவது வயதில் காலமானார்.

லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள தனது இல்லத்தில் அவர் காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2012ஆம் ஆண்டு அவருக்கு ஏற்பட்ட கடுமையான பக்கவாதம் காரணமாக சக்கர நாற்காலியைப் பயன்படுத்தி வந்த அவர், குரல் கொடுக்கும் கலை மற்றும் எழுத்துப் பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.

1973ஆம் ஆண்டு நாடக மேடையில் ஆரம்பித்த ‘தி ரொக்கி ஹெரர் பிக்சர் ஷோ என்ற கதாபாத்திரம், 1975 ஆம் ஆண்டில் திரைப்படமாக வெளியாகி மிகப்பெரிய கலாசாரத் தாக்கத்தை ஏற்படுத்தியது.

இதில் டிம் கரியின் நடிப்பு உலக சினிமா வரலாற்றில் நீங்கா இடம் பிடித்தது.

ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நகைச்சுவை, திகில் மற்றும் இசை நாடகங்கள் எனத் தனது பன்முகத் திறமையால் உலகெங்கிலும் உள்ள கோடிக்கணக்கான ரசிகர்களை டிம் கரி கவர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

சினிமா

சேலத்தில் ‘TVK’ முழக்கம்: மேடையில் தம்பஸ்-அப் காட்டி அசத்திய ஜேசன் சஞ்சய்!

தமிழ்நாட்டின்,சேலத்தில் நடைபெற்ற ‘சிக்மா’ திரைப்பட விழாவில் பங்கேற்றுப் பேசிய தவெக தலைவர் விஜய்யின் மகனும் இயக்குநருமான ஜேசன் சஞ்சய் “எனது குடும்பத்தினருக்கு சிறப்பு நன்றி” எனக் கூறினார்.…

164 0 0
சினிமா

ராமராஜன் மற்றும் இளையராஜாவை மீண்டும் இணைக்கும் ‘கடவுள் தந்த பரிசு’

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான ராமராஜன் மற்றும் இளையராஜா கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படத்திற்கு ‘கடவுள் தந்த பரிசு’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இளையராஜா மற்றும் ராமராஜன் இணைப்பில்…

164 0 0
சினிமா

‘த்ரிஷ்யம்’ இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில் உருவாகும் ‘சண்டக்காரி’!

‘த்ரிஷ்யம்’ திரைப்படத்தின் இயக்குநர் ஜீத்து ஜோசப் கதையில், நகைச்சுவை கலந்த ரொமான்டிக் காமெடி மற்றும் குடும்பப் பின்னணியில் உருவாகியுள்ள புதிய திரைப்படம் ‘சண்டக்காரி’. காதல், குடும்ப உறவுகள்…

129 0 0
சினிமா

மோகன்லாலின் ‘ஆபரேஷன் கங்கா’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மோகன்லால் நடிக்கும் புதிய திரைப்படமான ‘ஆபரேஷன் கங்கா’வின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இயக்குநர் விஷ்ணு மோகன் இயக்கும் இப்படத்தில் மோகன்லால்…

82 0 0