உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

வடக்கில் பாடசாலைப் பேருந்துகள் அனைத்தும் பதிவு செய்யப்பட வேண்டும்!

Uncategorized 2 வாரங்கள் முன்
115 பார்வைகள்

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை ஏற்றிச் செல்லும் பேருந்துகள் அனைத்தும் ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் பதிவு செய்யப்பட்டு, உரிய அனுமதிகளுடன் மட்டுமே பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட வேண்டும்.

பதிவு செய்யப்படாமலும் உரிய தகுதிகளைப் பூர்த்தி செய்யாமலும் இவ்வாறான சேவையில் ஈடுபடும் பேருந்துகளுக்கு எதிராக முன்னறிவிப்பின்றி சட்ட நடவடிக்கை கடுமையாக்கப்படும் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் பொறியியலாளர் சூ.விமலேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாணத்தில் பாடசாலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான போக்குவரத்துச் சேவையில் ஈடுபடும் பேருந்துகள், வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையில் முறையாகப் பதிவு செய்யப்படுவது கட்டாயமாகும். எனினும், உரிய அனுமதியோ அல்லது பதிவோ இன்றி, ‘சிசுசெரிய’ சேவையின் கீழ் இடம்பெறாமல் சில பேருந்துகள் தொடர்ந்தும் பாடசாலை போக்குவரத்துச் சேவையில் ஈடுபட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

இத்தகைய பேருந்து உரிமையாளர்கள் மற்றும் சேவை வழங்குநர்களுக்கு கடந்த ஐந்து மாதங்களாக நேரடியாக எச்சரிக்கைகளும் தேவையான அறிவுறுத்தல்களும் வழங்கப்பட்டுள்ளன. இருந்தபோதிலும், இதுவரை உரிய பதிவுகளை மேற்கொள்ளாத மற்றும் நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளைப் பூர்த்தி செய்யாத தரப்பினர் தொடர்ந்து பாடசாலை சேவையில் ஈடுபட்டால், அவர்களுக்கு எதிராக அதிகாரசபையால் உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

எனவே, பாடசாலை மாணவர்களையும் ஆசிரியர்களையும் ஏற்றிச் செல்லும் பேருந்து சேவைகளை நடத்தும் அனைத்து தரப்பினரும் நடைமுறையில் உள்ள விதிமுறைகளுக்கு அமைவாக தங்களைப் பதிவு செய்து, தேவையான தகுதிகள் மற்றும் அனுமதிகளைப் பெற்றுக்கொள்ளுமாறு வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் தலைவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

Uncategorized

அமெரிக்காவில் தட்டம்மை நோயால் பெண் உயி@ரிழப்பு!

அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தில் தட்டம்மை (Measles) நோய்த்தொற்றினால் பாதிக்கப்பட்டு 40 வயதுடைய பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். தடுப்பூசி மூலம் தடுக்கக்கூடிய இந்த அரிதான நோய்த்தொற்றால் நடப்பு ஆண்டில்…

43 0 0
Uncategorized

லொனக் தோட்ட பெனச் பிரிவு உள்ளக வீதியை புனரமைக்க மக்கள் கோரிக்கை

உள்ளூராட்சி வாரத்தை முன்னிட்டு, வட்டவளை–லொனக் பிரதான வீதியிலிருந்து பெனச் (மீனாட்சி) தோட்டத்திற்குச் செல்லும் சுமார் 750 மீற்றர் நீளமான உள்ளக வீதியை கொங்கிறீட் செய்து புனரமைக்குமாறு அம்பகமுவ…

74 0 0
Uncategorized

உக்ரைன் – ரஷ்யா பரஸ்பரத் தாக்குதல்!

உக்ரைன், ரஷ்யாவின் கருங்கடல் துறைமுகமான நோவோரோசிஸ்க் மீது ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணைகள் மூலம் ஒரு பெரும் தாக்குதலை நடத்தியுள்ளது. இந்தத் தாக்குதலால் ரஷ்யாவின் இரண்டு முக்கிய…

135 0 0
Uncategorized

யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் அமெரிக்க இராணுவ வீரர்களுக்கு உணவுப் பற்றாக்குறை!

மத்திய கிழக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ள யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன் போர்க்கப்பலில் தங்கியிருக்கும் ஆயிரக்கணக்கான அமெரிக்க இராணுவ வீரர்கள் உணவுப் பற்றாக்குறை, பழுதுடைந்த குழாய் வசதிகள் மற்றும் கடுமையான சோர்வு…

77 0 0