உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
26 புதன்

கிரகரி வாவியின் நீரில் விஷத்தன்மை?

இலங்கை செய்திகள் 58 நிமிடங்கள் முன்
53 பார்வைகள்

நுவரெலியா கிரகரி வாவியின் நீரை அருந்தினால் உயிரிழக்கும் அபாயம் கூட உள்ளதாக மத்திய சுற்றாடல் அதிகார சபை விஞ்ஞானபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளதாக நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீரஆரச்சி தெரிவித்துள்ளார்.

மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் சுற்றாடல் அதிகார சபையினால் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கைகள் மூலம் இந்தத் தகவல்கள் தெரியவந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல சிறிய ஏரிகளின் நீரைக் கொண்டு போஷிக்கப்படும் வகையில் உருவாக்கப்பட்ட கிரகரி வாவி, தற்போது மிகவும் மாசடைந்த நிலையில் காணப்படுவதாகத் அவர் சுட்டிக்காட்டினார்.

காலப்போக்கில் அந்தச் சிறிய ஏரிகள் தூர்ந்து போனதன் காரணமாக, மலையகப் பயிர்ச்செய்கைகளுக்காகப் பயன்படுத்தப்படும் கிருமிநாசினிகள், உரங்கள், பல்வேறு இரசாயனப் பொருட்கள் உள்ளிட்ட கழிவுகள் கிரகரி வாவியில் கலந்து அதன் நீரின் தன்மை அபாயகரமான முறையில் மாறியுள்ளதாக அவர் கூறுகிறார்.

மத்திய சுற்றாடல் அதிகார சபையின் தரவுகளின்படி, சாதாரண நீரில் இருக்க வேண்டிய பொஸ்பேட் அளவு 0.20 மில்லிகிராமாக இருந்தாலும், கிரகரி வாவியின் நீரில் அது 1.04 மில்லிகிராம் வரை அதிகரித்துள்ளது.

மேலும், பொதுவாக 0.50 மில்லிகிராமாக இருக்க வேண்டிய நைதரசன் அளவு 3.70 மில்லிகிராம் வரையிலும், உயிர் இரசாயன ஒட்சிசன் தேவை 9.72 மில்லிகிராம் வரையிலும் அதிகரித்துள்ளது.

இது மனித உயிருக்கு பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும் ஒரு தீவிர மாற்றமாகும்.

இந்த நெருக்கடியான நிலைமைக்குத் தீர்வு காண்பதற்காக சுற்றாடல் அமைச்சு, நகர அபிவிருத்தி அதிகார சபை மற்றும் நீர்ப்பாசனத் திணைக்களம் ஆகியவை இணைந்து ஒரு கூட்டுக்குழுவின் ஊடாக எதிர்கால நடவடிக்கைகளைத் திட்டமிட்டு வருவதாகவும் மஞ்சுள சுரவீரஆரச்சி மேலும் தெரிவித்தார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புகையிரத ஊழியர்களுக்கு சமூக ஊடகங்களை பயன்படுத்தத் தடை

கடமை நேரங்களில் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துதல் மற்றும் புகையிரத நடவடிக்கைகளின் முக்கியத்துவம் வாய்ந்த தகவல்கள் சமூக வலைத்தளங்களில் பரவுவதைத் தடுத்தல் தொடர்பில் புகையிரதத் திணைக்களம் விசேட சுற்றறிக்கை…

48 0 0
இலங்கை செய்திகள்

நாட்டில் மீண்டும் இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கு இடமளிக்கப் போவதில்லை!

நாட்டில் மீண்டும் எவ்வித இனவாத அல்லது மதவாத மோதல்களுக்கும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க வலியுறுத்தியுள்ளார். இன்று இடம்பெறும் நபிகள் நாயகத்தின் பிறந்ததினத்தை…

47 0 0
இலங்கை செய்திகள்

மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

90 களில் இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட மண்டைதீவு படுகொ@லையின் 36 ஆவது ஆண்டு நினைவு நாள் இன்று (26) உறவுகளின் கண்ணீருடன், உணர்வுபூர்வமாக அனுஸ்டிக்கப்பட்டது. 36 வருடங்களுக்கு முன்னர்…

37 0 0
இலங்கை செய்திகள்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி ஆரம்பம்

மட்டக்களப்பு ரோட்டராக்ட் கழகத்தின் ஏற்பாட்டில் “ரோட்டராக்ட் கிராண்ட் ஸ்மாஷ்” டென்னிஸ் போட்டி உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது. ஆர்வம், விளையாட்டுத்திறன் மற்றும் சமூக உணர்வை மையமாகக் கொண்டு இப்போட்டி…

12 0 0