கட்டுமானப் பொருட்களைத் திருடிய இருவர் கைது.!
கம்புருகொட, தெக்கவத்தை பிரதேசத்தில் நிர்மாணிக்கப்பட்டு வரும் இரு மாடி வீடு ஒன்றிற்காக கொண்டுவரப்பட்ட சுமார் 1.2 மில்லியன் ரூபாய் பெறுமதியான கட்டுமானப் பொருட்களைத் திருடிய குற்றச்சாட்டின் பேரில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜன்னல் மற்றும் கதவு நிலைவாசல், குளியலறைப் பொருட்கள் ஆகியவை திருடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சந்தேக நபர்கள் வீட்டிற்குள் நுழைந்து கட்டுமானப் பொருட்களைத் திருடி தங்களது வீடுகளுக்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களில் சில குறைந்த விலைக்கு விற்கப்பட்ட பின்னர் மீட்கப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்ட இருவரும் அதே பகுதியைச் சேர்ந்த வசிப்பிடங்களைக் கொண்டவர்கள்.
அவர்கள் பாணந்துறை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பண்டாரகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.