ஆண் ஒருவரின் ச*டலம் மீட்பு.!
புத்தளம் – வென்னப்புவ மேற்கு கடற்பகுதியில் கடலில் பாறையொன்றில் சிக்கியிருந்த ஆண் ஒருவரின் சடலம் நேற்று (22) மீட்கப்பட்டுள்ளது.
கடற்றொழிலாளர் ஒருவர் அளித்த தகவலின் அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுப்பதற்காக பயன்படுத்தப்படும் பாறைச்சுவரில் சடலம் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
25 முதல் 35 வயதுக்குட்பட்ட இளைஞனின் சடலத்தில் ஒரு பெல்ட் கட்டப்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீபத்தில் அங்குலான கடற்பகுதியில் கவிழ்ந்த கடற்படை கப்பலில் இருந்து காணாமல்போன மாலுமியின் சடலம் இதுவாக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் இது குறித்து கடற்படைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக கடற்படையும் வென்னப்புவ பொலிஸாரும் விசாரணை நடத்தி வருகின்றனர்.