உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

செம்மணியில் சோமரத்ன ராஜபக்ஷ காண்பிக்கும் இடங்களில் அகழ்வு செய்ய வேண்டும் : சிறீதரன் எம்.பி வலியுறுத்தல்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
94 பார்வைகள்

யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்தில் அரசு இதயச்சுத்தியுடன் வெளிப்படையாகச் செயற்பட வேண்டும் என்று இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் வலியுறுத்தினார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,

“செம்மணி மனிதப் புதைகுழியின் மதிலைத் தாண்டிய பகுதிகளிலும் மனித எலும்புக்கூடுகள் இருப்பதற்கான சாத்தியங்கள் காணப்படுவதால், நீதிமன்ற உத்தரவுடன் சோமரத்ன ராஜபக்ஷவைச் செம்மணிக்கு அழைத்துச் சென்று அவர் காண்பிக்கும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

செம்மணி மனிதப் புதைகுழியில் முதற்கட்டமாக 9 நாள்களும், இரண்டாம் கட்டமாக 45 நாள்களும், மூன்றாம் கட்டமாக 56 நாள்களும் என மொத்தம் 110 நாள்களாக அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதற்கமைய 584 மனித எலும்புக்கூடுகளும், 170 பிற சான்றுப்பொருள்களும் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

செம்மணிப் பகுதிக்குப் பார்வையிட ஐரோப்பிய ஒன்றியத் தூதுக்குழுவுக்கு அரசு அனுமதியளித்த போதிலும், கனடா உயர்ஸ்தானிகருக்கும் அவரது குழுவினருக்கும், ஆஸ்திரேலியா நாட்டுக்கும் அனுமதி மறுக்கப்பட்டமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அகழ்வுப் பணிகளைத் தொடர்ந்து முன்னெடுக்க அரசிடம் நிதி இல்லையாயின், இந்தியா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுடன் கலந்துரையாடி நிதி கோருவதோடு, தென்னாபிரிக்கா மற்றும் ஜப்பான் நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உண்மையை வெளிக்கொண்டுவர வேண்டும்.” – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

30 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0