ஆனவிந்தாவ சரணாலயத்தில் காட்டுத்தீ!
ஆனவிழுந்தாவ பகுதியில் நேற்று வெள்ளிக்கிழமை காட்டுத்தீ ஏற்பட்டது என்று ஆராச்சிக்கட்டுவ பொலிஸார் தெரிவித்தனர்.
பகலில் ஹெலிகளைப் பயன்படுத்தி ஆனவிழுந்தாவ ராம்சார் ஈரநிலப் பறவைகள் சரணாலயத்தில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், தீ அவ்வப்போது மீண்டும் பற்றி எரிந்துகொண்டே இருந்தது.
இதன் விளைவாக, மாலை வேளையிலிருந்து அப்பகுதி மக்கள், ஆராச்சிக்கட்டுவ பிரதேச சபை, புத்தளம் அனர்த்த முகாமைத்துவ நிலையம் அதிகாரிகள், வனவிலங்கு அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் ஆகியோர் ஒன்றிணைந்து, நீர் தாங்கி வாகனங்களைப் பயன்படுத்தி, இரவு நேரத்தில் தீ மய்யாவ கிராமப் பகுதி மற்றும் போகஹவெட்டிய ஆகிய பகுதிகளுக்குப் பரவாமல் தடுப்பதற்கான தீவிர நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தனர்.







