உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

திருக்கோவில் பிரதேசத்தில் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம்

இலங்கை செய்திகள் 2 வாரங்கள் முன்
114 பார்வைகள்

அம்பாறை மாவட்டம், திருக்கோவில் பிரதேச செயலகத்தில் பிரதேச காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் குழுக்கூட்டம் நேற்று (21) திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் தலைமையில் நடைபெற்றது.

இதன்போது, தற்போது அரச காணிகளைப் பயன்படுத்தி வருகின்ற பல்வேறு அரச நிறுவனங்களுக்கு, சம்பந்தப்பட்ட அனைத்து அரச நிறுவனங்களின் இணக்கப்பாட்டுடன் குறித்த காணிகளை வழங்குதல் மற்றும் அவற்றுக்குத் தேவையான காணி ஆவணங்களை வழங்குதல் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டது.

மேலும், திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் எஸ்.சசிகுமார் அவர்களினால் எரிபொருள் நிரப்பு நிலையம் அமைப்பதற்காக கோரப்பட்டுள்ள காணி தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. குறித்த காணியை வழங்குவது தொடர்பான சிபாரிசை, தொல்பொருள் திணைக்களத்தின் பரிசீலனைக்குப் பின்னர் வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

அத்துடன், திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகத்திற்கான புதிய கட்டடத்தை அமைப்பதற்கு பொருத்தமான காணியை ஒதுக்குவது தொடர்பிலும் ஆராயப்பட்டு, அதற்கான சிபாரிசு முன்வைக்கப்பட்டது.

இக்கூட்டத்தில் கருத்துத் தெரிவித்த திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் எஸ்.சசிகுமார், பொதுமக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அதிகாரிகள் துறைசார் வரையறைகளுக்குள் விட்டுக்கொடுப்புடன் செயற்பட்டு, துரிதமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.

இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதேச செயலாளர் த.கஜேந்திரன், தற்போதைய தேசிய மக்கள் சக்தி (NPP) அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு அமைவாக, பொதுமக்களின் தேவைகளை கருத்திற்கொண்டு அரச அதிகாரிகள் துரிதமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

இக்கூட்டத்தில் திருக்கோவில் பிரதேச சபை கௌரவ தவிசாளர் எஸ்.சசிகுமார் உள்ளிட்ட அம்பாறை மாவட்ட நகர அபிவிருத்தி அதிகார சபை, மாவட்ட காணி சீர்திருத்த ஆணைக்குழு, திருக்கோவில் வலயக் கல்வி அலுவலகம், நீர்ப்பாசனத் திணைக்களம், கரையோரப் பாதுகாப்பு மற்றும் கரையோர முகாமைத்துவ திணைக்களம், மத்திய சுற்றாடல் அதிகார சபை, வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வனபரிபாலனத் திணைக்களம் உள்ளிட்ட பல்வேறு துறைசார் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

மேலும், அம்பாறை மாவட்ட நில அளவை அலுவலக சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர், பிராந்திய தொல்பொருள் அலுவலக உதவிப் பணிப்பாளர், தம்பிலுவில் கமநல சேவைகள் மத்திய நிலைய உத்தியோகத்தர், தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை பிராந்திய முகாமையாளர், திருக்கோவில் பிரதேச செயலக காணி உத்தியோகத்தர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்கள் மற்றும் ஆலய நிர்வாகத்தினர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

திருக்கோவில் பிரதேசத்தில் காணிப் பயன்பாட்டை முறையாகத் திட்டமிடுதல், அரச மற்றும் பொது தேவைகளுக்கான காணிகளை ஒதுக்கீடு செய்தல், பல்வேறு அரச நிறுவனங்களின் காணித் தேவைகளை நிறைவேற்றுதல் மற்றும் சுற்றாடல் பாதுகாப்பு உள்ளிட்ட விடயங்களை சம்பந்தப்பட்ட திணைக்களங்களுடன் ஒருங்கிணைந்து ஆராயும் வகையில் இக்கூட்டம் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வரவிருக்கும் பெரும்போக விவசாயத் திட்டங்கள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களம் அறிக்கை.!

நாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர் கொள்ளளவு மற்றும் வரவிருக்கும் பெரும்போகச் செய்கைக்கான தயாரிப்புகள் குறித்து நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் மேலாண்மைப் பணிப்பாளர் பொறியாளர் எச். எம்.…

103 0 0
இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

135 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

119 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

121 0 0