உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

“சாகித்ய ரத்னா” விருது பெற்ற கலைஞர் மு.சிவலிங்கம் அவர்களின் “அமுதவிழா”

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
121 பார்வைகள்

மலையகத்தின் கலை, இலக்கியம், சிற்கதை, நாவல், நாடகம், திரைப்படம், தொழிற்சங்கம், அரசியல், மொழி பெயர்ப்பு என பன்முக ஆளுமை கொண்ட மூத்த எழுத்தாளரும், கலாபூஷணம் மற்றும் சாகித்ய ரத்னா விருதுகள் பெற்றவருமான மு.சி. என்று சிறப்பிக்கப்படும் மு.சிவலிங்கத்தின் அமுதவிழா நிகழ்வுகள் இம்மாதம் 27 ஆந் திகதி வியாழக்கிழமை பூரணை தினத்தன்று ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலைய கலையரங்கத்தில் காலை 9.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை இடம்பெறவுள்ளது.

மங்கல விளக்கேற்றல் மற்றும் அட்டன் ஹைலண்ட்ஸ் கல்லூரி மாணவர்களின் தமிழ்த் தாய் வாழ்த்துடன் ஆரம்பமாகும் அமுதவிழா நிகழ்வில் மல்லியப்பூசந்தி திலகரின் வரவேற்புரையைத் தொடர்ந்து, கவிஞர் சு. முரளிதரன் தலைமையுரை நிகழ்த்துவார்.

நிகழ்வில் “சிவாமுதம்” சிறப்பிதழ் வெளியீட்டில் கலாநிதி பெ. சரவணகுமார் சிவாமுதம் இதழின் கலை, இலக்கியப் பார்வை என்ற தலைப்பிலும், கலாநிதி எம்.எம். ஜெயசீலன் அரசியல், சமூகப் பார்வை என்ற தலைப்பிலும், துரை. மதியுகராஜா மாகாண சபை உப தலைவராக மு.சி. என்ற தலைப்பிலும், பேராசிரியர் ஸ்ரீபிரசாந்தன் ஈழத்து தமிழ் இலக்கிய பரப்பில் மு.சி. என்ற தலைப்பிலும், சந்திரலேகா கிங்ஸ்லி மு.சி. யின் சமுக, அரசியல் தடம் என்ற தலைப்பிலும், சிராஜ் மஹூர் சக சமூகப் பார்வையில் மு.சி.யின் சமூகப் பணி என்ற தலைப்பிலும், சிவா பரமேஸ்வரன் சர்வதேச தமிழர் தளத்தில் மு.சி. என்ற தலைப்பிலும், ஹேமச்சந்திர பத்திரன சக சமூகப் பார்வையில் மு.சி.யின் இலக்கியப் பணி என்ற தலைப்பிலும், சு. தவச்செல்வன் மு.சி.யின் கலை இலக்கியத் தடம் என்ற தலைப்பிலும் கருத்துரை நிகழ்த்துவார்கள்..

தொடர்ந்து பொன். பிரபாகரன் நெறியாள்கையில், மு.சி,யின் “ஒப்பாரிக் கோச்சி” சிறுகதை நாடகமும், மு.சி.யின் வாழ்க்கைச் சுவடு திரைக்காட்சியும், மலையகத் தமிழ்ச்சங்கம் மு.சி.க்கு வழங்கும் வாழ்நாள் சாதனையாளர் கௌரவமும் இடம்பெற்று மு. சிவானந்தனின் நன்றியுரையுடன் நிறைவு பெறும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

1 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0