உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

விவசாயிகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்! – அரிசி இறக்குமதிக்கு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் கண்டனம்

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
86 பார்வைகள்

விவசாயிகளை ராஜாவாக்குவோம் எனக் கூறிவிட்டு, வெளிநாட்டிலிருந்து அரிசியை இறக்குமதி செய்வது சரியா என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

2026ஆம் ஆண்டின் சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்கு அரசுக்குத் தேவையான 7 ஆயிரத்து 500 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டைப் பெற்றுக்கொள்வதற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட குறைநிரப்பு மதிப்பீடு தொடர்பான விவாதத்தில் நேற்று வெள்ளிக்கிழமை பங்கேற்று உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

76 ஆண்டு கால விவசாயிகளின் சோகத்தைச் சுபீட்சமான நிலைக்கு மாற்றித் தருவோம் எனக் கூறி ஆட்சிக்கு வந்தவர்கள், இன்று விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் ஜீவனோபாயத்தைப் பொருளாதாரப் படுகொலையாக மாற்றியுள்ளனர் என்று அவர் குற்றம் சாட்டினார்.

அரசின் அமைச்சர்களால் முன்வைக்கப்பட்ட தரவுகளின்படி, சிவப்பு நாடு மற்றும் வெள்ளை நாடு போன்றவற்றுக்கான உற்பத்திச் செலவைக் கணக்கிடும் போது, விவசாயிகளுக்குக் கிடைக்கும் குறைந்த இலாபத்தைக் கொண்டு எவ்வாறு வாழ முடியும் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

கீரி சம்பா உள்ளிட்ட அரிசி வகைகளுக்கு உரிய கட்டுப்பாட்டு விலைகள் பிறப்பிக்கப்படாததற்குக் காரணம், அத்துறையுடன் தனவந்தர்கள் சம்பந்தப்பட்டிருப்பதே ஆகும் என்றும் அவர் தெரிவித்தார்.

நாட்டின் உண்மையான அரிசித் தேவை 2.5 மில்லியன் மெற்றிக் தொன்னாக இருக்க, 3.2 மில்லியன் மெற்றிக் தொன் உற்பத்தி செய்யப்படுகின்றது என்றும், 5 இலட்சம் மெற்றிக் தொன் மேலதிக கையிருப்பு உள்ள நிலையிலும் 3 இலட்சத்து 40 ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்பட்டுள்ளமை விவசாயிகளின் வயிற்றில் அடிப்பது போன்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் முறையான தேசிய விவசாயக் கொள்கை வகுக்கப்பட வேண்டும் என்றும், நெல் சந்தைப்படுத்தல் சபையை மேலும் வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

எல் நினோ மற்றும் லா நினா தாக்கங்களை எதிர்கொள்ளத் தெளிவான வேலைத்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0