உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
12 சனி

இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
111 பார்வைகள்

வலப்பனை பிரதேச சபைக்குட்பட்ட குருந்தோயா வட்டாரத்தை மையப்படுத்தி, வலப்பனை பிரதேச சபை உறுப்பினர் திரு. மு.ராம்கி அவர்களின் ஏற்பாட்டிலும் தலைமையிலும் இலவச ஆயுர்வேத மருத்துவ முகாம் மிகவும் சிறப்பாக நடைபெற்று முடிந்தது.

இதில் 240க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன் பெற்றனர்.

நில்தண்டாஹின்ன ஆயுர்வேத வைத்தியசாலை மற்றும் கண்டி ஆயுர்வேத வைத்தியசாலை ஆகியவற்றின் முழுமையான பங்களிப்புடன் இம் மருத்துவ முகாம் ஒருங்கிணைக்கப்பட்டது.

​100 பயனாளர்களை இலக்காகக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இம்முகாமில், எதிர்பார்ப்பையும் தாண்டி 247 பொதுமக்கள் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக் கொண்டமை குறிப்பிடத்தக்கது.

​இங்கிலாந்தைச் சேர்ந்த இரு மருத்துவர்களும், அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இரு மருத்துவர்களும் இம்முகாமில் கலந்துகொண்டு தங்களது சேவைகளை வழங்கியமை சிறப்பம்சமாகும்.

நிகழ்வு குறித்து பிரதேச சபை உறுப்பினர் மு.ராம்கி தெரிவிக்கையில்:
​குருந்தோயா வட்டாரத்தில் முதன்முறையாக இத்தகையதொரு பிரம்மாண்ட மருத்துவ முகாம் நடத்தப்பட்டுள்ளது.

இங்கு வருகை தந்த மக்களின் வாழ்த்துகளும் நன்றிகளும் எனக்கு மேலதிகமாகச் சேவையாற்ற பெரும் மனநிறைவையும் ஊக்கத்தையும் அளித்துள்ளன என்றார்.

இப்பகுதியில் முதன்முறையாக இவ்வளவு பெரிய அளவில் நடைபெற்ற இம்முகாமிற்கு ஆதரவளித்த மருத்துவக் குழுவினருக்கும் நல்நெஞ்சங்களுக்கும் நன்றி தெரிவித்த திரு. மு.ராம்கி அவர்கள், எதிர்காலத்திலும் மக்களுக்குப் பயனுள்ள பல திட்டங்களைச் செயல்படுத்தவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

ஜனாதிபதியால் நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் : ஐக்கிய மக்கள் சக்தி குற்றச்சாட்டு!

அரசமைப்பு திருத்தம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு இன்னும் வெளிவராத நிலையில், அதனை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றுவோம் எனக் கூறி ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நீதிமன்றத்துக்கு மறைமுக அழுத்தம் கொடுத்து…

97 0 0
இலங்கை செய்திகள்

எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது! : அமைச்சர் பிமல் ரத்நாயக்க திட்டவட்டம்!!

Photo – எந்தக் கட்சியாலும் அரசைக் கவிழ்க்கவே முடியாது!மொட்டுத் தரப்பினரின் போராட்டம் பயனளிக்காது!! தற்போதைய அரசியல் சூழலில் எந்தவொரு அரசியல் கட்சியும் இந்த ஸ்திரமான அரசைக் கவிழ்க்கவோ…

86 0 0
இலங்கை செய்திகள்

மாகாண சபைத் தேர்தல் விசேட செயற்குழுவின் காலம் நீடிப்பு! : எதிர்க்கட்சிப் பிரதிநிதிகள் எதிர்ப்பு!!

காலவரையறையின்றி பிற்போடப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தலை எந்தத் தேர்தல் முறைமையின் கீழ் நடத்தலாம் என்பதை ஆராய்ந்து யோசனை மற்றும் பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட செயற்குழுவின்…

110 0 0
இலங்கை செய்திகள்

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் உலக சுற்றுலா தின விழா

வடமாகாண சுற்றுலா பணியகத்தின் ஏற்பாட்டில் மன்னாரில் எதிர்வரும்  25ஆம் திகதி முதல் 27 ஆம் திகதி வரை இடம் பெற உள்ள  உலக சுற்றுலா தின விழா…

91 0 0