உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

கடலில் படகு கவிழ்ந்து விபத்து; முதியவர் உயிரிழப்பு.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
90 பார்வைகள்

சிலாபம் முகத்துவாரத்துக்கு அருகாமையில் மீன்பிடி நடவடிக்கைகளுக்காகச் சென்ற சிறிய ரக படகொன்று திடீரெனக் கவிழ்ந்த விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் உயிர் தப்பியுள்ளார்.

இந்தச் சம்பவம் நேற்று (20) இடம்பெற்றுள்ளது.

சிலாபம் – சேதவத்தை பகுதியைச் சேர்ந்த 67 வயதான திஸாநாயக்ககே ஜயரத்ன என்ற முதியவரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

கடலில் ஏற்பட்ட திடீர் சீற்றம் மற்றும் கடுமையான நீரோட்டத்தின் வேகத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்ததே இந்த விபத்துக்குக் காரணம் என ஆரம்பக்கட்ட விசாரணைகளில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

படகு கவிழ்ந்ததில் கடலில் தத்தளித்த இருவரில் ஒருவர் துரிதமாகச் செயற்பட்டு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.

காப்பாற்றப்பட்ட மேற்படி மீனவர் காயங்களுடன் உடனடியாகச் சிகிச்சைக்காக சிலாபம் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் சிலாபம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0