உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
24 திங்கள்

த.வி.பு முகாம் என்ற பெயரில் மாபெரும் நாடகம்.!

இலங்கை செய்திகள் 3 நாட்கள் முன்
69 பார்வைகள்

கிளிநொச்சி – பளைப் பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளின் பயிற்சி முகாம் இருக்கின்றது என வதந்தி பரப்பிய நபர், போலி அடையாள அட்டையைப் பயன்படுத்தியதுடன், ஏழு வெவ்வேறு முகவரிகளைப் பயன்படுத்தி வந்துள்ளார் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று வியாழக்கிழமை விசேட கூற்றொன்றை முன்வைத்து உரையாற்றிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றுகையில்,
“இந்த வதந்தியைப் பரப்பினார் எனக் கூறப்படும் பொரலஸ்கமுவவைச் சேர்ந்த சங்கீத் ஜெயசேகர என்பவர் தற்போது கைது செய்யப்பட்டு, 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் தன்னை மருத்துவர் எனப் போலியாகக் காட்டிக் கொண்டுள்ளதுடன், மோசடி வழக்குகள் உட்பட மூன்று வெவ்வேறான குற்றவியல் வழக்குகளிலும் சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளார்.

ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவிக்கப்பட்ட கருத்துகளைத் தொடர்ந்து, கிளிநொச்சியிலுள்ள குறித்த இடத்தை அதிகாரிகள் சோதனையிட்டனர். அங்கு எல்.ரி.ரி.ஈ. பயிற்சி முகாம் இயங்கியதற்கான எந்தவொரு ஆதாரமும் கிடைக்கவில்லை எனவும், அதுவொரு பயிர்ச்செய்கை நிலம் மட்டுமே என்பதும் விசாரணைகளில் உறுதியாகியுள்ளது.

பளை வனவளத் திணைக்களத்துக்குரிய நிலத்தை விவசாய நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தியமை தொடர்பில் தியாகராஜா உள்ளிட்ட சிலருக்கு எதிராக வழக்குத் தொடுக்கப்பட்டு, அவர்கள் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும், சோதனைக்குச் சென்ற விசேட அதிரடிப் படையினருக்கு இடையூறு விளைவித்தமை உள்ளிட்ட ஏழு சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.

இனங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் நோக்கிலும், சமூகத்தில் குழப்பத்தை விளைவிக்கும் வகையிலுமே மேற்படி நபர் போலித் தகவல்களைப் பரப்பியுள்ளார்.

பயங்கரவாதத்துக்கோ அல்லது இன ரீதியான பிரிவினைகளைத் தூண்டுவதற்கோ அரசு ஒருபோதும் இடமளிக்காது.” – என்று அமைச்சர் ஆனந்த விஜேபால திட்டவட்டமாகக் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

அமரர் கௌரி சங்கரி தவராசா நினைவாக சூரிய சக்தி மின் விளக்குகள் பொருத்தும் செயற்பாடு.!

மறைந்த சிரேஷ்ட சட்டத்தரணி கௌரி சங்கரி தவராசா அவர்களின் ஐந்தாவது ஆண்டு (23-08-2021 ) நினைவாக தீவகம் சிவில் சமூகத்தின் உப செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின்…

74 0 0
இலங்கை செய்திகள்

சுற்றுலாப் பேருந்து மோதி ஒருவர் உயிரிழப்பு.!

நுவரெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அக்கல பூங்காவிற்கு அருகில், நுவரெலியா – வெலிமடை பிரதான வீதியில் இன்று பிற்பகல் சுமார் 1 மணியளவில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.…

72 0 0
இலங்கை செய்திகள்

பிரவுன்லோ தோட்ட ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு.!

மஸ்கெலியா பிரவுன்லோ தோட்ட அருள்மிகு ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக பெருவிழாவை முன்னிட்டு, முகூர்த்தக்கால் நாட்டும் நிகழ்வு இன்று சிறப்பாக இடம்பெற்றது. ஆலய புனராவர்த்தன திருப்பணிகளின்…

82 0 0
இலங்கை செய்திகள்

யாழில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகள் திருட்டு; மூவர் கைது.!

யாழ்ப்பாணத்தில் வீடுகளுக்குள் புகுந்து தங்க நகைகளைத் திருடி வந்ததாகக் கூறப்படும் மூவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், சுமார் ஒரு கோடியே 50 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 பவுண்…

77 0 0