அம்பாறை ஆலையடிவேம்பில் பிரஜைகள் சாசனம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு!
அம்பாறை மாவட்டம் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவில் பொதுமக்கள் அரச சேவைகளை இலகுவாகவும் விரைவாகவும் பெற்றுக்கொள்வதை உறுதிப்படுத்தும் நோக்கில், பிரஜைகள் சாசனம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு இன்று புதன்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ், உதவிப் பிரதேச செயலாளர் மா. ராமக்குட்டி, ஆலையடிவேம்பு பிரதேச சபை தவிசாளர் ஆர். தர்மதாச, செயலாளர் எஸ். திவாகரன், Search for Common Ground நிறுவனத்தின் சிரேஷ்ட நிகழ்ச்சித் திட்ட முகாமையாளர் எம்.ஐ.எம். சதாத், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், Alayadivembu CBOs Consortium உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் (UNDP) 3P4D நிதியுதவியின் கீழ், Search for Common Ground நிறுவனத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் “Public Engagement” திட்டத்தின் ஒரு பகுதியாக, சிறு மானிய முன்முயற்சியின் (Small Grant Initiative) கீழ் ஆலையடிவேம்பு சமூகமட்ட அமைப்புகளின் ஒன்றியமான Alayadivembu CBOs Consortium ஊடாக இச்செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இந்நிகழ்வு ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மற்றும் ஆலையடிவேம்பு பிரதேச சபை ஆகிய இடங்களில் இடம்பெற்றது.
குறித்த நிகழ்வில் பொதுமக்கள் தமக்குரிய அரச சேவைகள், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள், தேவையான ஆவணங்கள் மற்றும் தொடர்புடைய தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளும் வகையில், இரு அலுவலகங்களிலும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் (Smart TV) மூலம் நிறுவப்பட்டு விழிப்புணர்வுத் தகவல்கள் திரையிடப்பட்டது..
.
அத்தனை தொடர்ந்து பிரஜைகள் சாசனம் தொடர்பான தகவல் பெயர்ப்பலகைகளும் பொதுமக்களின் பார்வைக்காக காட்சிப்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது…
குறிப்பாக ஆலையடிவேம்பு பிரதேசத்திற்குட்பட்ட கவடாப்பிட்டி, கண்ணகிபுரம், அலிக்கம்பை உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து அரச சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வருகை தரும் பொதுமக்கள், தங்களுக்குத் தேவையான சேவைகள், அவற்றைப் பெற்றுக்கொள்வதற்கான நடைமுறைகள் மற்றும் தேவையான ஆவணங்கள் தொடர்பான தகவல்களை இலகுவாக அறிந்துகொள்ளச் செய்வதே இம்முயற்சியின் முக்கிய நோக்கமாக கருதப்படுகின்றது…
இதன் மூலம் அரச சேவைகள் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதுடன், அரச சேவை வழங்கலில் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புக்கூறலை மேம்படுத்துவதற்கும், பொதுமக்களுக்கும் அரச நிறுவனங்களுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்துவதற்கும் இம்முயற்சி பங்களிக்கும் என எதிர்பார்க்கப்படுவது மேலும் குறிப்பிடத்தக்க விடயமாகும்…



