உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாளை நாடாளுமன்றத்தில் சகல எம்.பிக்களுடனும் பேச்சுவார்த்தை

இலங்கை செய்திகள் 19 மணி நேரம் முன்
110 பார்வைகள்

அரசமைப்பின் 22 ஆவது திருத்தம் மற்றும் வெற்றிடமாகவுள்ள உயர்நீதிமன்ற நீதியரசர்கள் பதவிகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காகச் சட்டத்தரணிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் நாளை வியாழக்கிழமை நாடாளுமன்றத்துக்கு வருகை தரவுள்ளனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ விடுத்த கோரிக்கைக்கு இணங்க, நிலவும் தற்போதைய சூழ்நிலைகள் குறித்து எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மட்டுமன்றி, நாடாளுமன்றத்திலுள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் அவர்கள் தெளிவுபடுத்தவுள்ளனர் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் சபாநாயகருக்கும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது என்று எதிர்க்கட்சித் தலைவர் இன்று புதன்கிழமை நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

இதற்கமைய, திட்டமிடப்பட்டவாறு நாளை நண்பகல் 12 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை சட்டத்தரணிகள் சங்கத்தினர் நாடாளுமன்றத்துக்கு வருகை தந்து கலந்துரையாடவுள்ளனர்.

இந்தக் கலந்துரையாடலில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ள எதிர்க்கட்சித் தலைவர், ஜனாதிபதியைச் சந்தித்து தமது கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டது போன்றே, இம்முறையும் சுமுகமான முறையில் கருத்துக்களைப் பரிமாறிக்கொள்வதற்காக வருகை தரும் சட்டத்தரணிகளுடன் ஏனைய உறுப்பினர்களையும் இணைந்துகொள்ளச் செய்யுமாறு வலியுறுத்தினார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

85 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

68 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

77 0 0