உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

போ*தைப்பொருள் கடத்தல்களில் ஈடுபடுபவர்களின் சொத்துக்கள் தொடர்பில் தீவிர விசாரணை.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
120 பார்வைகள்

வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மற்றும் நாட்டிற்கு அழைத்துவரப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல்களுடன் தொடர்புடைய 25 பேரின் சொத்துக்கள் குறித்து பரந்த அளவிலான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினரால் இச் சிறப்பு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் கைது செய்யப்பட்டுத் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வரும் பெருமளவிலான போதைப்பொருள் கடத்தல்காரரான ஷிரான் பாசிக் என்பவருக்குச் சொந்தமான சொத்துக்கள் தொடர்பான விசாரணைகளும் இதில் அடங்குவதாகப் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.

அத்துடன், அவரது மகனின் பெயரில் கொள்முதல் செய்யப்பட்ட பல சொத்துக்களுக்கு எதிராக அண்மையில் தடை உத்தரவுகள் பெறப்பட்டதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும், கொஸ்கொட சுஜி, ரத்கம விதுர, இரத்மலானை சைமா மற்றும் கஞ்சிப்பானை இம்ரான் போன்ற முக்கிய குற்றவாளிகளுக்குச் சொந்தமான உள்நாட்டு சொத்துக்கள் தொடர்பிலும் தற்போது தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இவ்வாறான சட்டவிரோத வழிகளில் ஈட்டப்பட்ட அனைத்துச் சொத்துக்கள் குறித்தும் நீதிமன்றத்தில் செய்திகளைப் பதிவுசெய்து, தேவையான சட்டப்பூர்வ நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

39 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

35 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

27 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

26 0 0