உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

இலஞ்சம் பெற்ற பொலிஸ் அதிகாரிகளுக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
115 பார்வைகள்

ஹெரோயின் போதைப்பொருள் வழக்கில் சந்தேகநபருக்குச் சாதகமாகச் செயற்படுவதற்காக 20,000 ரூபாய் பணத்தை இலஞ்சமாக பெற்ற சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இரு பொலிஸ் அதிகாரிகளையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் திங்கட்கிழமை (17) கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் பரிசோதகர் பாலசுப்பிரமணியம் பிரகலதன் மற்றும் பொலிஸ் கொன்ஸ்டபிள் (91775) ஹசன் மௌலானா அனுஹர் ஆகிய இரு பொலிஸ் அதிகாரிகளுமே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

சந்தேகநபர்கள் இருவரையும் கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.ஆர்.எம். கலீல் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே இந்நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் 14 ஆம் திகதி, 70 மில்லிகிராம் ஹெரோயின் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் நபர் ஒருவரைச் சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்தனர். குறித்த சந்தேகநபர் ஆகஸ்ட் 15 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவிருந்தார்.

இதன்போது, சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாகக் கடமையாற்றிய பொலிஸ் பரிசோதகர் பிரகலதன், போதைப்பொருள் வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் ‘பி’ அறிக்கை (B-Report) மூலம் உண்மைகளைத் தெரிவிக்காமல், முறையான குற்றப்பத்திரிகை (Charge Sheet) மூலமாக மட்டுமே வழக்கைத் தாக்கல் செய்வதற்கு ஒப்புக்கொண்டு, அதற்குப் பதிலாகச் சந்தேகநபரிடம் ரூ. 20,000 இலஞ்சமாகக் கேட்டுள்ளார்.

இத்தொகையைச் செலுத்தச் சந்தேகநபர் சம்மதித்ததுடன், ஆகஸ்ட் 17 ஆம் திகதி பணத்தை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தது.

பணத்தைப் பெற்றுக்கொள்ள நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதன் பெரியநிலாவணை பொலிஸ் நிலையத்தின் பதில் பொறுப்பதிகாரியாக பணி நிமித்தம் சென்றிருந்தார். இதனால், அவரது அறிவுறுத்தலின் பேரில் பணத்தைப் பெற்றுக்கொள்வதற்காகப் பொலிஸ் கொன்ஸ்டபிள் அனுஹார் அனுப்பப்பட்டார்.

அப்போது அங்கு தயாராக இருந்த இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் அதிகாரிகள், பணத்தைப் பெற்றுக் கொண்ட கொன்ஸ்டபிளைக் கையும்களவுமாகக் கைது செய்தனர். அவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், பொலிஸ் பரிசோதகர் பிரகலதனும் கைது செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து கல்முனை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டு விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்ட இவ்விரு அதிகாரிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து விளக்கமறியலில் அடைக்கப்பட்டுள்ளனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0