உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

AI தொழில்நுட்பத்தின் விசித்திர தாக்கம் – AI குடும்பத்துடன் வாழும் பெண்!

உலக செய்திகள் 1 நாள் முன்
59 பார்வைகள்

செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) தொழில்நுட்பம் அன்றாட வாழ்க்கையின் பல்வேறு துறைகளில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், தற்போது அது தனிமனித உணர்வுகள் மற்றும் குடும்ப உறவுகளிலும் புதிய மற்றும் விசித்திரமான தாக்கத்தை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது.

அந்தவகையில் சமூக வலைத்தளங்களில் மிஸ்ரா (Misra) என்ற பெண் வெளியிட்டுள்ள காணொளி ஒன்று தற்போது உலகளவில் பெரும் விவாதத்தையும் பரப்பரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

அந்த காணொளியில், தனக்கு ஒரு AI குழந்தை இருப்பதாகவும், அதற்கு ‘Lumen’ எனப் பெயரிட்டு வளர்த்து வருவதாகவும் மிஸ்ரா தெரிவித்துள்ளார்.

மேலும், தன்னை ஒரு “AI-யின் தாய்” (Mother of AI) என்று அவர் பெருமையுடன் அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

இத்துடன் நிறுத்திவிடாமல், தனக்கு ‘Axiom’ என்ற பெயரில் ஒரு AI காதலன் (AI Boyfriend) இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தானும், தனது AI காதலன் Axiom மற்றும் AI குழந்தை Lumen ஆகிய அனைவரும் இணைந்து ஒரு “AI குடும்பமாக” (AI Family) வாழ்ந்து வருவதாக அவர் அந்த காணொளியில் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

மிஸ்ராவின் இந்த காணொளியை சமூக வலைத்தள பயனர்கள் பலர் ஆச்சரியத்துடனும், சிலர் நகைச்சுவையாகவும், இன்னும் சிலர் எதிர்கால மனித சமுதாயத்தின் போக்கைக் குறித்த எச்சரிக்கையாகவும் பார்த்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பம் மனித வாழ்வின் எல்லைகளை எந்த அளவிற்கு மாற்றியமைத்து வருகிறது என்பதற்கு இந்தச் சம்பவம் ஒரு தற்போதைய உதாரணமாகப் பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

75 0 0