உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்த ஜீவன் தொண்டமான்.!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
103 பார்வைகள்

அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலை காரணமாக மண்சரிவினால் பாதிக்கப்பட்டுள்ள மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட சாமிமலை – கவரவிள தோட்டத்திற்கு நேரில் சென்று ஆலய மண்டபத்தில் தற்காலிகமாக தங்கியுள்ள மக்களையும் பாதிப்பிற்கு உள்ளான வீடுகளையும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஜீவன் தொண்டமான் பார்வையிட்டிருந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த மக்களின் தற்போதைய நிலைமைகள், அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்கள் மற்றும் அவசரத் தேவைகள் குறித்தும் கேட்டறிந்து கொண்டார்.

தொடர்ச்சியாக மண்சரிவு ஏற்படும் அபாயம் உள்ள பகுதிகளில் மக்கள் வாழ்வது தொடர்பில் நீண்டகால தீர்வு அவசியம். எனவே, பாதிக்கப்பட்ட குடும்பங்களின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு கவரவிள தோட்ட முகாமையாளருடன் தொலைப்பேசியில் விடயத்தினை தெரிவித்து, மண்சரிவுகளால் பாதிக்கப்பட்டுள்ள வீடுகளை சுற்றியுள்ள மண்மேடுகளை அகற்றுவதற்கும் ஏனைய உதவிகளை தோட்ட நிர்வாகத்தினால் செய்து கொடுக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.

அதேபோன்று, அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான நிவாரண உதவிகளை பெற்றுக்கொடுப்பதற்காக அரசாங்கத்தின் கவனத்திற்கும் இந்த விடயங்களை கொண்டு செல்லப்படும் என்றார்.

நாம் அரசாங்கத்தில் இருந்தபோதும் மக்களின் தோளோடு தோள் நின்று அவர்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்தோம். தற்போது எதிர்க்கட்சியில் இருந்தாலும், மக்களின் பிரச்சினைகளை தொடர்ந்தும் முன்னிலைப்படுத்தி, அவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் அர்ப்பணிப்புடன் செயற்படும்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

யாழில் வயோதிபப் பெண் கொ*லை.!

புத்தூர் மேற்கு சிவன் கோவிலுக்கு அண்மித்த பகுதியில் வயோதிபப் பெண் ஒருவர் அவரது வீட்டிலேயே கொலை செய்யப்பட்ட சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருகையில்,குறித்த…

0 0 0
இலங்கை செய்திகள்

அரசுக்கு 75 சதவீத மக்களின் ஆதரவு இருப்பின் மாகாண சபைத் தேர்தலை நடத்திக் காட்டுங்கள்.!

“இந்த அரசு மாகாண சபைத் தேர்தலை நடத்தாமல் தொடர்ந்து பிற்போடுவதற்குத் திட்டமிட்டே செயற்பட்டு வருகின்றது. அதனாலேயே மாகாண சபைத் தேர்தலை நடத்துவது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானிக்க அமைக்கப்பட்ட…

23 0 0
இலங்கை செய்திகள்

ஊழலில் இருந்து தப்பவே பழைய அரசியல்வாதிகள் ஒரே மேடையில் ஒன்றிணைவு.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன உண்மையில் ஸ்ரீலங்கா பிணை முன்னணி என்றே அழைக்கப்பட வேண்டும். அனுராதபுரத்தில் நடைபெற்ற மக்கள் பேரணியின் போது எதிர்த்தரப்பினருக்கு எதிராக ‘அநுர திருடன்’ என்று…

41 0 0
இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

42 0 0