உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

கனடா மீதான புதிய வரிகளை அமெரிக்கா தற்காலிகமாக நீக்கியுள்ளது!

உலக செய்திகள் 1 நாள் முன்
44 பார்வைகள்

கனடாவுடனான வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்யும் பணிகள் நடைபெற்று வருவதால், அந்நாட்டின் பல்வேறு வகையான பொருட்கள் மீதான புதிய வரிகளை விதிப்பதை மூன்று நாட்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.

கனடாவும் அமெரிக்காவும் ஒரு ஒப்பந்தத்தை எட்டியுள்ளன (ஆவணங்கள் இறுதி செய்யப்பட வேண்டிய நிலையில் உள்ளன); இதன் அடிப்படையில், நாளை (புதன்) காலை முதல் அமுலுக்கு வரவிருந்த கனடா மீதான 50% வரிகளை மூன்று நாட்களுக்கு நிறுத்தி வைத்துள்ளேன் என்று ட்ரம்ப் சமூக ஊடகப் பதிவு ஒன்றில் குறிப்பிட்டார்.

சுமார் 20 பில்லியன் டொலர் (28 பில்லியன் கனேடிய டொலர்) மதிப்பிலான கனடிய இறக்குமதிப் பொருட்கள் மீது 50% வரி விதிப்பு நடைமுறைக்கு வருவதற்கு இரண்டு மணி நேரத்திற்கும் குறைவான நேரமே இருந்த நிலையில் இந்த அறிவிப்பு வெளியானது.

வாகனங்கள் மீதான அமெரிக்காவின் இறக்குமதி வரிகள் மற்றும் பல கனேடிய மாகாணங்களில் அமெரிக்க மதுபான விற்பனைக்கு விதிக்கப்பட்டுள்ள தடை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்களில் இரு தரப்பினருக்கும் இடையே முட்டுக்கட்டை நீடிக்கிறது.

ஆகஸ்ட் 19-ஆம் திகதியை காலக்கெடுவாகக் குறிப்பிட்டு புதிய வரி விதிப்பு குறித்து ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்ததைத் தொடர்ந்து, ஜூலை மாதம் முதல் வர்த்தகப் பேச்சுவார்த்தையாளர்கள் தீவிரமான பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், இந்த வாரத்தில் ட்ரம்ப் மற்றும் பிரதமர் மார்க் கார்னி ஆகியோர் இருமுறை இது குறித்துப் பேசியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

செர்பியாவில் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த அதிநவீன ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை அனுப்பியது ரஷ்யா

செர்பியாவில் பரவி வரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் (Vladimir Putin) தனது நாட்டின் அதிநவீன ‘ஐஎல்-76’ (IL-76) ‘நீர்ப்பம்பி’ வானுர்தியை உடனடியாக அனுப்பி…

50 0 0
உலக செய்திகள்

35 வருடங்களுக்குப் பிறகு பங்களாதேஷில் வாக்கெடுப்பின் மூலம் ஜனாதிபதித் தேர்வு!

பங்களாதேஷில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு நாளை (20) வாக்கெடுப்பு முறை மூலம் ஜனாதிபதி தேர்தல் நடைபெறவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பங்களாதேஷின் ஜனாதிபதியான மொஹமட்…

64 0 0
உலக செய்திகள்

ஈரான் மீது இதுவரை இல்லாத அளவுக்கு கடுமையான பொருளாதாரத் தடை – ட்ரம்ப் அறிவிப்பு!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரான் மீது இதுவரை எந்தவொரு நாட்டிற்கும் எதிராக மேற்கொள்ளப்படாத வகையில் மிகவும் கடுமையான பொருளாதார நடவடிக்கையை அறிவித்துள்ளார். ஈரானுக்கு பொருளாதார ரீதியாகவும்…

55 0 0
உலக செய்திகள்

இந்த ஆண்டுக்குள் கிம் யொங் உன்னைச் சந்திக்க ட்ரம்ப் முயற்சி!

வட கொரியத் தலைவர் கிம் யொங் உன்னை இந்த இலையுதிர் காலத்தில் சந்திக்க ஏற்பாடு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தனது உதவியாளர்களை வலியுறுத்தி வருவதாக…

76 0 0