உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் விழிப்புணர்வுப் பேரணி

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
73 பார்வைகள்

ஜீவோதய சிறுவர் அபிவிருத்தி நிலையத்தின் ஏற்பாட்டில் சிறுவர் பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு சிறுவர் பாதுகாப்பு விழிப்புணர்வு பேரணி பரிகாரி கண்டல் பேருந்து நிலையத்தில் இன்று செவ்வாய்க்கிழமை (18) மாலை இடம்பெற்றது.

சிறுவர் பாதுகாப்பு மற்றும் சிறுவர் உரிமைகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் குறித்த பேரணி இடம்பெற்றது.

குறிப்பாக சிறுவர்களுக்கு பாதுகாப்பான சூழல், பராமரிப்பு, கல்வி மற்றும் உரிய உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்வது பெற்றோர்கள் மட்டுமல்லாது ஒவ்வொருவரினதும் பொறுப்பாகும்.

இப்பேரணியில் மூலம் சிறுவர் துஷ்பிரயோகம், மற்றும் வன்முறைகளுக்கு எதிராக குரல் கொடுப்பதோடு,ஒவ்வொரு சிறுவரும் பாதுகாப்பாகவும் மகிழ்ச்சியாகவும் வாழ வேண்டியதன் அவசியத்தையும் சமூகத்திற்கு எடுத்துரைக்கப்பட்டது.

குறித்த விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்ட சிறுவர்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு காணப்பட்டனர்.

குறித்த நிகழ்வில் அரச உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் அதிகாரிகள் நலன்விரும்பிகள் கலந்து கொண்டனர்

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

61 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0