உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

யாழில் எட்டு விபத்துக்களை ஏற்படுத்திய பிரதான வீதி – வீதி அபிவிருத்தி அதிகாரசபை மௌனம்!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
140 பார்வைகள்

யாழில் சேதமடைந்த வீதி ஒன்றில் எட்டு விபத்துகள் இடம்பெற்றும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையானது இதுவரை நடவடிக்கை எடுக்காத விடயம் மக்கள் மத்தியில் விசனத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

782 வழித்தட யாழ் – காரைநகர் வீதியானது மானிப்பாய் – எழுமுள்ளி பகுதியில் சேதமடைந்துள்ளது. வீதியின் முழு அகலமும் சுமார் 15 அடிகள் நீளத்திற்கு சேதமடைந்துள்ளது.

வீதியில் நிலத்தின் கீழுள்ள குடிநீர் வழங்கல் குழாயானது சேதமடைந்ததால் தண்ணீர் வீதியை பிரித்துக்கொண்டு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் பாய்ந்தது. இந்நிலையில் அந்த தண்ணீர் குழாயானது சீர் செய்யப்பட்டது இருப்பினும் அந்த வீதியானது சீர் செய்யப்பட்டாமல் காப்பெற் உடைந்த நிலையிலேயே காணப்படுகிறது.

குறித்த வீதியால் மூன்று வழித்தடங்களில் பயணிக்கும் பேருந்துகள் பயணிக்கின்றன அத்துடன் தினமும் பல்லாயிரக்கணக்கான பயணிகள் அந்த வீதியை பயன்படுத்துகின்றனர்.

அத்துடன் அந்த இடத்தில் இதுவரை எட்டு விபத்துகள் ஏற்பட்டதாகவும், அந்த எட்டு விபத்துக்களில் பல்கலைக்கழக மாணவி ஒருவர் உட்பட பலர் காயமடைந்துள்ளாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த வீதியானது வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு சொந்தமான வீதியாக காணப்படுகிறது. அந்த வீதியானது திருத்தம் செய்யப்படாமல் தொடர்ச்சியாக இவ்வாறே காணப்பட்டால் மரணங்கள் கூட ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அவ்வாறு இடம்பெறும் உயிரிழப்புகளுக்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபையே பொறுப்பு கூறவேண்டிய தேவை காணப்படுகிறது.

எனவே மேலும் விபத்துகள் அல்லது அசம்பாவிதங்கள் எவையும் ஏற்பட முன்னர் அந்த வீதியை சீர் செய்ய வேண்டும் என்பதே மக்களது கோரிக்கையாக உள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

118 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

98 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

106 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

118 0 0