உள்ளடக்கத்திற்குச் செல்க
ஆகஸ்ட் 2026
20 வியாழன்

செம்மணி உள்ளிட்ட ஈழத்தமிழர்கள் மீதான சகல படுகொ*லைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை அவசியம்.!

இலங்கை செய்திகள் 2 நாட்கள் முன்
75 பார்வைகள்

செம்மணி படுகொ*லை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட சகல படுகொலைகளுக்கும் சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டியது அவசியம் என வலியுறுத்திய வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், சர்வதேச நீதி விசாரணைக்கு தற்போதைய அரசு முழுமையான ஒத்துழைப்பை வழங்க வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

இவ்வாறு சர்வதேச நீதி விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதன் மூலம் உண்மைகள் வெளிக்கொணரப்பட்டு, தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமெவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழினப் படுகொலைச் சம்பவங்களுக்கு சர்வதேச விசாரணை தேவை. செம்மணி மனிதப் புதைகுழியின் மூன்றாங்கட்ட அகழ்வுப் பணிகளின் 54ஆம் நாள் அகழ்வு 17.08.2026 நேற்று இடம்பெற்றது.

இதன்போது புதிதாக 10 எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், 08 மனித எலும்புக் கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

அந்தவகையில் இதுவரை செம்மணி மனிதப் புதைகுழியிலிருந்து மொத்தமாக 572 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அடையாளங்காணப்பட்டுள்ளதுடன், அவற்றிலிருந்து 565 மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகள் அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறாக செம்மணியில் தோண்டத் தோண்ட தமிழ் மக்களுடைய மனித எலும்புக் கூட்டுத்தொகுதிகள் வெளிப்பட்டுக்கொண்டேயிருக்கின்றன.

சிறார்கள், பெண்கள், முதியவர்கள் என்ற எந்த வேறுபாடுகளுமின்றி எலும்புக்கூடுகள் வெளிப்படுகின்றன. தடையப் பொருட்களாக சிறார்களின் பால் போத்தல்கள், பாடசாலைப் பைகளும் வெளிப்படுகின்றன.
பச்சிளம் பாலகர்களும், பாடசாலைச் சிறார்களும், தாய்மாரும் என்ன பாவம் செய்தார்கள்? ஆயுதங்களோடு இருந்தார்களா?

எனவே இந்த படுகொலைக் குற்றவாளிகளும், இந்தப் படுகொலைகளுக்குப் பின்னாலுள்ள அப்போதைய ஆட்சியாளர்களும் சர்வதேச நீதிவிசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும். அதுவே பாதிக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கின்றது.

யாழ்ப்பாணத்தில் 17.08.2026 நேற்றையதினம் ‘நீதியின் ஓலம் – 02’ அணையாவிளக்கு தொடர் போராட்டத்தின் இறுதிநாளில் வடக்கு, கிழக்கைச் சேர்ந்த தமிழ் மக்கள் இணைந்து மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றினை மேற்கொண்டிருந்தனர். செம்மணி படுகொலை உள்ளிட்ட தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளுக்கு சர்வதேச நீதி விசாரணையைக் கோரியே குறித்த மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி மேற்கொள்ளப்பட்டது.

எனவே தயவுசெய்து தற்போதைய ஆட்சியாளர்களே எமது மக்களின் வலிகளையும், அவலங்களையும் புரிந்துகொள்ளுங்கள். எமது தமிழ் மக்கள் மீது நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கான சர்வதேச நீதி விசாரணை மேற்கொள்வதற்கு நடவடிக்கை மேற்கொள்ளுங்கள். சர்வதேச நீதி விசாரணைக்கு ஒத்துழையுங்கள். தமிழினப் படுகொலைக் குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டுமென இப் பேரவையைக் கோருகின்றேன் – என்றார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது

வீடொன்றின் மொட்டை மாடியில் கஞ்சா தோட்டம் முற்றுகை- வியாபாரி கைது இடியப்ப வியாபாரத்தின் போர்வையில் கஞ்சா விற்பனை பாறுக் ஷிஹான் video-https://fromsmash.com/vSWi7P6Nb_-dt கல்முனை கடற்கரை பள்ளி வீதியில்…

86 0 0
இலங்கை செய்திகள்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல்

பிரதேச செயலாளரை அச்சுறுத்திய பெண் அரச உத்தியோகத்தருக்கு ஆகஸ்ட் 25 வரை விளக்கமறியல் பாறுக் ஷிஹான் நிந்தவூர் பிரதேச செயலாளரை அவரது கடமை நேரத்தில் அச்சுறுத்திய குற்றச்சாட்டின்…

70 0 0
இலங்கை செய்திகள்

அக்கரைப்பற்றின் முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை விளக்கமறியல்!

அக்கரைப்பற்று முன்னாள் மேயர் சக்கி அதாவுல்லாஹ்வுக்கு செப்டம்பர் 1 வரை தொடர்ந்தும் விளக்கமறியல்! பாறுக் ஷிஹான் அரச பெண் அதிகாரி ஒருவரைத் திருமணம் முடிப்பதாக ஆசை வார்த்தைகள்…

62 0 0
இலங்கை செய்திகள்

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்திப் பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து முன்னெடுக்க வேண்டும்!

வடக்கு மாகாணத்தின் அபிவிருத்தி பணிகளை அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து, சுமுகமாகவும் சிறப்பாகவும் ஒற்றுமையுடனும் முன்னெடுத்துச் செல்ல வேண்டும்-வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் . மன்னார் நிருபர் எஸ்.ஆர்.லெம்பேட்(19-08-2026)…

78 0 0