உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

ஃபெராரி நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனம் ஏல விற்பனையில் சாதனை!

உலக செய்திகள் 3 வாரங்கள் முன்
94 பார்வைகள்

ஃபெராரி(Ferrari) நிறுவனத்தின் முதலாவது மின்சார வாகனமான ‘ஃபெராரி லூஸ்’ (Ferrari Luce) ஏலத்தில் 40 மில்லியன் அமெரிக்க டொலருக்கு (சுமார் 29.5 மில்லியன் பவுண்டுகள்) விற்பனையாகி புதிய சாதனை படைத்துள்ளது.

கலிபோர்னியாவில் நடைபெற்ற ‘RM Sotheby’s’ தொண்டு நிறுவன ஏலத்தில், ‘ஃபெராரி லூஸ்’ வாகனம் 40 மில்லியன் டொலருக்கு விற்பனையானது.

ஏலத்தில் விற்பனை செய்யப்பட்ட புதிய வாகனம் ஒன்று பெற்ற மிக அதிகபட்ச விலை இதுவாகும்.

இந்த நிதி முழுமையாக ஃபெராரி அரக்கட்டளையின் கல்வி சார்ந்த திட்டங்களுக்கு வழங்கப்படும்.

அப்பள் நிறுவனத்தின் முன்னாள் முதன்மை வடிவமைப்பாளர் சர் ஜோனி ஐவ் (Sir Jony Ive) மற்றும் அவரது ‘LoveFrom’ குழுவினரால் வடிவமைக்கப்பட்ட இந்த வாகனம், கடந்த மே மாதம் அறிமுகப்படுத்தப்பட்டபோது கடும் விமர்சனங்களைச் சந்தித்தது.

5 இருக்கைகள், 4 கதவுகள் மற்றும் மின்சார மின்கல அமைப்பு ஆகியவற்றைக் கொண்டுள்ளதால், இது ஃபெராரியின் பாரம்பரிய அடையாளத்தை இழந்துவிட்டதாகக் விமர்சகர்களும், நிறுவனத்தின் முன்னாள் தலைவர்களும் கருத்து தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், ஏலம் விடப்பட்ட இந்தச் சிறப்பு பதிப்பு வாகனம், ஒளியின் திசைக்கு ஏற்ப நிறம் மாறும் பிரத்யேக ‘Madreperla Semi-Gloss’ வெண்மை நிறப் பூச்சு, சிறப்பு சக்கரங்கள் மற்றும் பிரத்யேக உள்கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது.

ஆரம்ப கால விமர்சனங்கள் மற்றும் பங்குகளின் தற்காலிக வீழ்ச்சிக்கு மத்தியிலும், சீன சந்தையில் நிலவும் பலமான வரவேற்பு காரணமாக இந்த ஆண்டிற்கான விற்பனை இலக்கை ஃபெராரி நிறுவனம் ஏற்கனவே எட்டியுள்ளது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

உலக செய்திகள்

60 குழந்தைகள் உட்பட 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்கு!

வடக்கு காஸாவின் ஜைதுன் பகுதியில் இஸ்ரேலியத் தாக்குதல்களால் இடிந்து வீழ்ந்த கட்டிடங்களின் இடிபாடுகளுக்குள்ளிருந்து மீட்கப்பட்ட 60 சிறுவர்கள் உட்பட சுமார் 100 பாலஸ்தீனர்களின் எச்சங்களுக்கு இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டுள்ளன.…

124 0 0
உலக செய்திகள்

கிரீஸ் விமானக் கண்காட்சியில் பயங்கர விபத்து – இரு விமானிகள் உயிரிழப்பு

கிரீஸின் தலைநகர் ஏதென்ஸுக்கு வடக்கே உள்ள தனாக்ரா விமானப்படைத் தளத்தில் நடைபெற்ற “Athens Flying Week 2026” சர்வதேச விமானக் கண்காட்சியின் போது, கிரேக்க விமானப்படைக்குச் சொந்தமான…

93 0 0
உலக செய்திகள்

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு தீவிரம்: விமான சேவைகள் இரத்து!

அனாக் கிரகடாவ் (Anak Krakatau) எரிமலை வெடிப்பினால் ஏற்பட்ட புகை மண்டலம் மற்றும் சாம்பல் காரணமாக, ஜகார்த்தாவிற்குச் சேவை அளிக்கும் இரண்டு விமான நிலையங்கள் உட்பட இந்தோனேசியாவின்…

131 0 0
உலக செய்திகள்

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையே மோதல் தீவிரம்!

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ள நிலையில், இரு தரப்பும் பரஸ்பரம் எண்ணெய் தாங்கிக் கப்பல்கள் மற்றும் போர்க்கப்பல்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியுள்ளன. ஈரானுடன்…

98 0 0