உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
14 திங்கள்

கஞ்சா பயிரிட்டவரிடம் இலஞ்சம்: கைதான 4 பொலிஸாருக்குப் பிணை!

இலங்கை செய்திகள் 4 வாரங்கள் முன்
109 பார்வைகள்

தனமல்வில தலைமையகப் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நிகவெவ பகுதியில் கஞ்சாத் தோட்டமொன்றைச் சோதனையிட்டு, அதன் உரிமையாளர்களிடம் ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நான்கு பொலிஸ் உத்தியோகத்தர்களையும் பிணையில் செல்ல அனுமதித்து வெல்லவாய நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஒருவருக்கு தலா 50,000 ரூபா ரொக்கப் பிணை மற்றும் தலா இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளின் அடிப்படையில் அவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

மொனராகலை பிராந்திய ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் சிலர் அண்மையில் நிகவெவ பகுதியில் சோதனையொன்றை நடத்தியுள்ளதோடு, இதன்போது அந்த கஞ்சாத் தோட்டத்தின் உரிமையாளரிடமிருந்து ரூபா 5 இலட்சம் இலஞ்சம் பெறப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் மொனராகலை வலய ஊழல் தடுப்புப் பிரிவில் கடமையாற்றும் இரண்டு பொலிஸ் சார்ஜன்ட்கள், ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் மற்றும் ஒரு பொலிஸ் கொன்ஸ்டபிள் சாரதி எனப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தனமல்வில தலைமையகப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ எனக் கூறி ஊழல்வாதிகள் பேரணி செல்வது கீழ்த்தரமான அரசியல் கலாச்சாரம்.!

“அனுராதபுரத்தில் எதிர்க்கட்சியின் கூட்டத்துக்கு வந்தவர்கள் ‘எமது திருடன் – எமக்கு நல்லம்’ என்று குறிப்பிட்டுக் கொண்டு பேரணியாக செல்கின்றார்கள். இதுதான் கீழ்த்தரமான கலாச்சாரம். எமது ஆட்சியில் இலஞ்ச,…

40 0 0
இலங்கை செய்திகள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவினரின் பேரணிகளால் அரசுக்கு எந்தச் சவாலும் இல்லை.!

“ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வரும் மக்கள் பேரணிகள் மற்றும் அரசியல் கூட்டங்கள் அரசுக்கோ அல்லது தேசிய மக்கள் சக்திக்கோ எந்தவிதமான அரசியல் சவாலையும்…

37 0 0
இலங்கை செய்திகள்

சந்தர்ப்பவாத அரசியலுக்காகவே மீண்டும் மஹிந்தவிடம் விமல் வீரவன்ச, உதய கம்மன்பில தஞ்சம்.!

“கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் முரண்பட்டுக் கொண்டிருந்த விமல் வீரவன்ச, உதய கம்மன்பில போன்றோரும் தற்போது மீண்டும் மஹிந்தவிடம் தஞ்சமடைந்துள்ளனர். இவர்களின் அரசியல் கலாச்சாரம் இதுவேயாகும்” என்று தொழில்…

29 0 0
இலங்கை செய்திகள்

தெஹிவளை தாக்குதல் பின்னணி பற்றி வார இறுதியில் உண்மை வெளிவரும்.!

கொழும்பு, தெஹிவளையில் நடத்தப்பட்ட கைக்குண்டுத் தாக்குதல் சம்பவமானது ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களின் அதிகரிப்பைக் காட்டுகின்றது என்ற கருத்தைத் தாம் முழுமையாக நிராகரிக்கின்றார் என்று பொதுமக்கள் பாதுகாப்புப் பிரதி அமைச்சர்…

27 0 0