உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

கஞ்சிப்பான இம்ரான் கைது.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
74 பார்வைகள்

இலங்கையை விட்டுத் தப்பியோடிய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான கஞ்சிப்பான இம்ரான் இன்னும் சில நாட்களில் இலங்கைக்கு அழைத்து வரப்படுவார் என பாதுகாப்புப் பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது இத்தாலியில் உள்ள அவரை இலங்கைக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஹம்பாந்தோட்டையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றிய போது அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

அதற்கமைய, இன்டர்போல் பிடியாணையின் கீழ் தேடப்பட்டுவரும் 58 குற்றவாளிகள் இதுவரை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

கஞ்சிப்பான இம்ரான் முந்தைய மகிந்தவின் ஆட்சியின் போது அரசியல் பிரமுகர்கள் ஆபத்தான குற்றவாளிகள் மற்றும் பல நபர்களுடன் தொடர்புகளைப் பேணியுள்ளார். இது அந்தக்காலகட்டத்தில் நாட்டின் சட்டத்தின் ஆட்சி குறித்து கேள்விகளை எழுப்புகின்றது.

இன்டர்போல் பிடியாணைகளின் கீழ் தேடப்பட்டுவந்த பல முக்கிய பாதாள உலக மற்றும் வர்த்தகக் குற்றவாளிகள் உட்பட 58 ஆபத்தான குற்றவாளிகள் இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

பெரும் குற்றவியல் வலையமைப்பின் தலைவர்களை அரசாங்கம் தற்போது குறிவைத்து அவற்றை அகற்றி வருகின்றது. இந்த முயற்சிகள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளவர்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்தியுள்ளன.

மிகவும் ஆபத்தான குற்றவாளிகளை மீண்டும் இலங்கைக்கு அழைத்து வருவதற்கு பாரிய முயற்சி தேவைப்பட்டது. அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைகள் சட்டத்தின் ஆட்சியின் மேலாதிக்கத்தையும் அதிகாரத்தையும் வெளிப்படுத்துகின்றன” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

131 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

119 0 0