உள்ளடக்கத்திற்குச் செல்க
செப்டம்பர் 2026
7 திங்கள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் பிரச்சினையை விசாரிக்க சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும்.!

இலங்கை செய்திகள் 3 வாரங்கள் முன்
126 பார்வைகள்

அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவம் மற்றும் தொழில்சார் நலன்களைப் பாதித்துள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணையை முன்னெடுப்பதற்கான சுயாதீன விசாரணைக் குழு நியமிக்கப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் உறுதியளித்தார்.

வடக்கு மாகாண சபை அலுவலக வளாகத்துக்கு முன்பாக இன்று (17.08.2026) திங்கட்கிழமை காலை போராட்டத்தில் ஈடுபட்ட வடக்கு மாகாண தொழிற்சங்கங்களின் சம்மேளனப் பிரதிநிதிகள், அதனைத் தொடர்ந்து வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்து தமது மனுவை கையளித்தனர். இவர்களில் ஐந்து பிரதிநிதிகளுக்கு ஆளுநரை நேரில் சந்தித்து தமது கருத்துக்களை முன்வைப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.

அவர்கள் கையளித்த மனுவில், அபிவிருத்தி உத்தியோகத்தர்களின் கௌரவத்தையும் தொழில்சார் நலன்களையும் பாதித்ததாகக் குறிப்பிடப்படும் சம்பவம் தொடர்பில் சுயாதீனமானதும் பக்கச்சார்பற்றதுமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், சம்பவத்துடன் தொடர்புடைய ஒலி மற்றும் ஒளிப்பதிவுகள் உள்ளிட்ட ஆதாரங்கள் முறையாகப் பாதுகாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.

மேலும், விசாரணையின் முடிவுகளின் அடிப்படையில் உரிய நிர்வாக அல்லது ஒழுக்காற்று நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதன்போது, அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் முன்வைத்துள்ள கவலைகள் மற்றும் எதிர்பார்ப்புகளை ஆளுநர் கவனமாக கேட்டறிந்து உள்வாங்கிக்கொண்டதுடன், விடயம் தொடர்பில் உண்மைத்தன்மையை நிலைநாட்டும் வகையில் சுயாதீனமான விசாரணை முன்னெடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

அத்துடன், அரச சேவையில் பணியாற்றும் எந்தவொரு தரப்பினரின் கௌரவமும் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தைச் சுட்டிக்காட்டிய ஆளுநர், இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றும் குறிப்பிட்டார்.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள WHATSAPP CHANNEL இணையுங்கள்
மேலும் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்

தொடர்புடைய செய்திகள் NEW

இலங்கை செய்திகள்

புதையல் தோண்டிய ஐவர் கைது.!

ஹிங்குராக்கொடை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தல்பொத்த பகுதியில் புதையல் தோண்டும் முயற்சியில் ஈடுபட்ட ஐந்து சந்தேகநபர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸ் அதிகாரிகளுக்குக் கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமைய,…

132 0 0
இலங்கை செய்திகள்

இந்தியாவில் இருந்து கடல் வழியாக வருகை தந்த 11 பேரும் பிணையில் விடுவிப்பு.!

இந்தியாவில் இருந்து படகு மூலம் இலங்கைக்குள் நுழைய முற்பட்டவேளை மணல் தீவுகளில் மீட்கப்பட்ட 11 பேரும் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். தலைமன்னார் கடற்பரப்பில் கடற்படையினர் தமது ரோந்து நடவடிக்கையில்…

115 0 0
இலங்கை செய்திகள்

20 இற்குத் தேவையான சர்வஜன வாக்கெடுப்பு 22 இற்கு ஏன் அவசியம் இல்லாமல் போனது?

அன்று 20ஆவது திருத்தத்தின்போது சர்வஜன வாக்கெடுப்பைக் கோரியவர்கள், இன்று 22ஆவது திருத்தத்துக்கு அதனைத் தவிர்ப்பது ஏன் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ கேள்வி எழுப்பியுள்ளார். ஐக்கிய…

112 0 0
இலங்கை செய்திகள்

தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும்.!

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சித் தாம் ஒருபோதும் இரண்டுக்கு மூன்றாக வளைந்துகொடுக்கப் போவதில்லை எனவும், வன்முறை வழிகளில் அல்லாமல் ஜனநாயக ரீதியிலான தேர்தல் களத்திலேயே அரசு தோற்கடிக்கப்படும் எனவும்…

120 0 0